களைக்கட்டிய கோலிவுட் கல்யாணம்.. கீர்த்தி சுரேஷ் டூ சித்தார்த் வரை..! 2024 ரீவைண்ட்

post-img
சென்னை: பல ஆண்டுகளாகக் காதல் வலையில் சிக்கிக்கொண்டிருந்த சினிமா பிரபலங்கள் பலர் இந்த 2024 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்துள்ளனர். அவர்கள் யார்? பல ஆண்டுகளாகக் காதல் கிசுகிசுவில் சிக்கத் தவித்து வந்த கீர்த்தி சுரேஷ் திருமணப் பந்தத்தில் அடி எடுத்தது இந்த 2024இல்தான். அவர் அவரது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை மணம் புரிந்துகொண்டார். இவர்கள் இருவருக்குள் சிறுவயது முதலே ஒரு காதல் இருந்துள்ளது. அதை சரியான நேரம் பார்த்து ட்விட்டரில் தட்டிவிட்டார் கீர்த்தி. பின்னர் அதே வேகத்தில் திருமணம் நடந்தது. முதலில் இந்து முறைப்படியும் பின்னர் கிறிஸ்துவ முறைப்படியும் என இரண்டு விதமான திருமணங்களை இந்த ஜோடி செய்து கொண்டது. இதே டிசம்பர் மாதம் 8ஆம் தேதி மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தனது பல ஆண்டு காதலியான தாரணி காளிங்கராயரைக் கேரள பாரம் பரியப்படி திருச்சூரில் உள்ள குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துகொண்டார். இதில் சட்டை அணியாமல் காளிதாஸ் வெறும் உடம்புடன் நின்றிருந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளானது. 2019இல் இருந்து காதலில் விழுந்து இருந்த இருவரும் இந்த ஆண்டு தம்பதியாகப் பதவி உயர்வு பெற்றனர். இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்டது ஆகாஷ் பாஸ்கரன் கல்யாணம்தான். அதுவரை இவர் யார் என்பதே அதிகம் வெளியே தெரியாமல் இருந்தது. நயன்தாரா, சிம்பு, தனுஷ் என பெரிய சினிமா பட்டாளமே இவரது கல்யாண நிகழ்ச்சியில் குவிந்ததால் ஓவர் ஹைட்டில் புகழின் உச்சிக்கே சென்றார் ஆகாஷ். இவர் தாரணீஸ்வரியை மணந்தார். கடந்த நவம்பர் மாதம் ரம்யா பாண்டியனின் திருமணம் ரிஷிகேஷில் நடைபெற்றது. அவர் தனது காதலரான யோகா பயிற்சியாளர் லவல் தவான் கரம் பிடித்தார். இவர் ஒரு பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால், முறைப்படி ரம்யாவுக்கு வரதட்சணை கொடுத்து மணம் செய்த தகவல் சமீபத்தில் வைரலானது. இந்த உண்மையை ரம்யாவின் தாயார் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். வெற்றிமாறனின் 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டவர் டாப்சி. சுருள் சுருளான அவரது ஹேர் ஸ்டைலில் சிக்கிச் சிக்கி சிதறியவர்கள் அதிகம். அந்தளவுக்குத் தமிழ் ரசிகர்கள் அவரைக் கொண்டாடி இருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் நடிக்க முடியாமல் போனது. பின்னர் பாலிவுட் பக்கம் தாவினார் டாப்சி, அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இவருக்கும் மத்தியாஸ் போ டேனிஷுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் உதய்பூரில் நடந்தது. இவரது கணவர் மத்தியாஸ் ஒரு முன்னாள் பேட்மிண்டன் வீரராவார். இவருக்குள்ளும் 10 ஆண்டுக்கால காதல் இருந்து வந்தது. அதே உற்சாகத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் சட்டப்பூர்வமான திருமணத்தை டாப்சி செய்துகொண்டார். அதையடுத்து குடும்பத்தினரின் சூழ 2024 ஏப்ரலில் மீண்டும் மணப்பந்தலில் அமர்ந்தார் டாப்சி. அதுவே மீடியாக்களின் வைரலானது. இந்த 2024இல் பலரையும் அதிர்ச்சியில் தள்ளிய திருமணம் என்றால் அது பிரேம்ஜியின் கல்யாணம்தான். அதை அவரது உறவினர்களே முதலில் நம்பவில்லை. அவரது அப்பா கங்கை அமரனுடன் இந்தச் செய்தியை பிரேம்ஜி பகிர்ந்து கொண்டபோது அவருக்கே அது 'ஷாக்' நியூஸ் ஆக இருந்தது. தன்னால் முதலில் நம்ப முடியவில்லை என்று அவரே தனது பேட்டிகளில் சொல்லி இருந்தார். அதற்குக் காரணம் பிரேம்ஜியின் கல்யாணத்தை வைத்தே பல காலம் மைலேஜ் பார்த்தார்கள் அவரது சினிமா நண்பர்கள். ஆகவே, அவர் உண்மையாகத் திருமணம் செய்யப் போவதாகச் சொன்னபோதும் பலரும் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அத்தனை வருட வதந்திகளை உடைத்து இந்த ஆண்டு ஜூன் மாதம் மணப்பந்தலில் அமர்ந்தார் பிரேம்ஜி. கிட்டத்தட்ட 45 வயதில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இவரது திருமணம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் குடும்பத்தினர்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவாக நடைபெற்றது. பிரேம்ஜியை போலவே பல வருடங்களாக கல்யாணப் பற்றிய வதந்திகளில் அதிகம் அடிப்பட்டவர் வரலக்ஷ்மி சரத்குமார். அவருக்கு 39 வயதை எட்டிவிட்ட நிலையில் இல்லற வாழ்க்கைக்குள் இந்த வருடம் காலடி எடுத்துவைத்தார். அரசியல் செல்வாக்கு உள்ள சரத்குமார் தனது மகளின் திருமணத்திற்காகப் பல அரசியல் தலைவர்களைச் சந்தித்து அழைப்பிதழ் வைத்தார். அவர் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை மணம் செய்துகொண்டார். சச்தேவ் முன்பே திருமணமானவர் என்பதால் சில சலசலப்புகள் சினிமா வட்டாரத்தில் எழுந்தது. அதை மீறி தனது கணவரை கரம் பிடித்தார் வரலக்ஷ்மி. அதற்காக உடல் எடையை அவர் குறைத்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தில் தடபுடலாக நடந்தது இந்த ஜோடியின் திருமணம். அதன்பின் தமிழ் ஊடகத்தினரைச் சந்தித்து மண வாழ்க்கை குறித்துப் பேசினார் நிக்கோலாய். இந்தப் பட்டியலில் கட்டாயம் சித்தார்த்தை சேர்த்துக்கொள்ளவேண்டும். சாக்லெட் பாய் என பலரால் சித்தார்த் திடீரென்று இந்தாண்டு அதிதி ராவைக் காதல் மணம் புரிந்துகொண்டார். இவர்களின் கல்யாணம் தெலங்கானாவில் கோயிலில் நடைபெற்றது. அதனையடுத்து இந்த ஜோடியின் பிரம்மாண்ட கல்யாண வைபவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கலந்துகொள்ள ராஜஸ்தானில் நடந்தது. இதேபோல் இன்னொரு சப்ரைஸ் திருமணத்தை கோலிவு சினிமா உலகம் கண்டது இந்த ஆண்டுதான். அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா யாருமே எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தார். தம்பி ராமையாவின் மகன் உமாபதியைக் காதல் மணம் புரிந்தார். மகளின் விருப்பத்தை ஏற்று அர்ஜுன் இந்தக் கல்யாணத்தைத் தடபுடலாக நடத்தி வைத்தார். இந்த ஜோடியின் திருமணம் ஜூன் மாதம் நடந்து முடிந்தது. இந்த ஆண்டில்தான் 'டான்' படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் திருமணமும் நடைபெற்றது. அதேபோல் நடிகை மேகா ஆகாஷ் திருமண வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்தார். அவர் தன் காதலர் சாய் விஷ்ணுவைக் கடந்த செப்டம்பரில் கரம் பிடித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post