அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. சிஆர்பிஎஃப் போலீசார் குவிப்பு

post-img
வேலூர்: வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனை நடக்கும் நிலையில், சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். எம்பி கதிர் ஆனந்த் இல்லத்திலும், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். வேலூர் காட்பாடி, காந்தி நகரில் தமிழக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம் உள்ளது. இன்று காலையில் திடீரென சென்னையில் இருந்து 4 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துரைமுருகன் இல்லத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். கதிர் ஆனந்த் அதே வீட்டில் வசித்து வரும் நிலையில், அவரது இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. அமலாக்கத்துறை சோதனையின் காரணமாக சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இன்று காலையில் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. அமைச்சர் துரைமுருகனுக்கு பூஞ்சோலை சீனிவாசன் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. எதற்காக இந்த சோதனை நடக்கிறது என்று தற்போது வரை தகவல் இல்லை. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post