பட்டா யார் பெயரில் உள்ளது? பத்திரம் இல்லாமல் நிலத்தின் சர்வே எண் அறிய முடியுமா? வில்லேஜ் மாஸ்டர் செம

post-img
சென்னை: சர்வே எண் மூலம் அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது, எவ்வளவு பரப்பளவில் இருக்கிறது? என்பதை அறிந்து கொள்வது எப்படி தெரியுமா? கூகுள் மேப் போலவே இருக்கும் வில்லேஜ் மாஸ்டர் வசதியை பற்றி தெரியுமா? அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த வசதியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? அரசின் வருவாய் பதிவேட்டிலுள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சர்வே எண் தரப்பட்டிருக்கும். அத்துடன் அதனுடைய உட்பிரிவு எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட நிலத்தை இந்த அடையாளம் வைத்துதான் அறிந்து கொள்ளப்படுகிறது, பத்திரப்பதிவும் மேற்கொள்ளப்படுகிறது. பட்டா ஆவணங்கள்: பதிவு பத்திரங்கள், பட்டா ஆவணங்கள் போன்ற நில விவரரங்களை அறிந்து கொள்ள சர்வே எண்கள் உதவுகின்றன. எனினும் இந்த சர்வே எண்கள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இந்த அறியாமையை வைத்துதான் ஆங்காங்கே நில மோசடிகள் நடக்கின்றன... ஒரு நிலத்தை விற்பனைக்கு காண்பித்து விட்டு, வேறு ஒரு சர்வே எண்ணை கிரையம் செய்து தந்துவிட்டு, அப்பாவி மக்களை சிலர் ஏமாற்றி விடுகிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே அரசு புதிய இணையதள வசதியை கொண்டுவந்துள்ளது. அதன்படி, சர்வே எண் மூலம், அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது? எவ்வளவு பரப்பளவில் இருக்கிறது? அதற்கான வரைப்படம் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். தமிழ் நிலம் திட்டத்தின் கீழ் https://tngis.tn.gov.in/apps/village- dashboard/படம்: என்ற வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தை சமீபத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. கிராமப்புற வசதி: கூகுள் மேப் போல காணப்படும், இதிலுள்ள மேப் மூலமாக நம்முடைய வீடு, நிலத்திற்கான சர்வே எண், உட்பிரிவு எண்ணை தெரிந்து கொள்ளலாம். அத்துடன், அந்த சர்வே எண்ணை https://eservices.tn. gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர், நில அளவுகள், நிலத்தின் தன்மைகளை தெரிந்து கொள்ளலாம். பத்திரப்பதிவு துறையின் கணக்கீட்டின் படி சுமார் 446 கோடி சர்வே எண்கள் உள்ளன. அதில் வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தில் கிராமப்புறங்களில் இருக்கும் சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளன. வன பகுதி, தீவுகள், மலைகள் போன்றவற்றின் இடங்கள் குறித்த விவரங்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் போலி சர்வே எண்ணில் நடைபெறும் மோசடிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அனைத்து நில மோசடிகளுக்கும் இந்த வெப்சைட் மூலம் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோரிக்கை: எனினும் நாம் எந்த தெருவில் நிற்கிறோம், எந்த பகுதியில் இருக்கிறோம் என்பதனை ஜிபிஎஸ் மூலம் எளிதாக தெரிந்து கொள்வதைபோல, வில்லேஜ் மாஸ்டருக்கு என்று அரசு ஒரு தனி செயலி கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல, முழுக்க முழுக்க கிராமங்களிலுள்ள வீடு, நிலங்களை மட்டுமே இந்த வில்லேஜ் மாஸ்டர் இணையத்தில் தெரிந்து கொள்ள முடியுமே தவிர நகர்புறங்களுக்கு இந்த திட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லை. எனவே, நகர்ப்புறங்களுக்கும் இந்த வசதியை ஏற்படுத்தினால், அங்கு நிலவும் நில மோசடிகளை தடுக்க முடியும் என்று மற்றொரு கோரிக்கையும் எழுந்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post