"ஆணுறைகள்.." 2024ல் அந்த மாதிரி பொருட்களை அதிகம் ஆர்டர் செய்த இளசுகள்.. எங்கே அதிகம்? டிரெண்ட் என்ன

post-img
டெல்லி: இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் நாம் பொருட்களை ஆர்டர் செய்தால் ஓரிரு நிமிடங்களில் வீடுகளுக்கே பொருட்கள் வந்துவிடுகிறது. இதற்கிடையே இந்த 2024ம் ஆண்டில் இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களில் ஒன்றாக ஆணுறை இருக்கிறது. மேலும், எந்த நகரில் அதிகளவில் ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது. நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு அதிலும் ஒருபடி மேலே சென்று இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் படுவேகமாக வளர்ந்தது. இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் மூலம் நீங்கள் பொருட்களை ஆற்டர் செய்தால் சில நிமிடங்களில் அது வீட்டுக்கே வந்துவிடும். இதற்கிடையே இந்த 2024ம் ஆண்டில் தனது இன்ஸ்டாமார்ட் தளத்தில் என்னவெல்லாம் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. ஆணுறைகள்: ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களின் ஒன்றாக ஆணுறைகள் மாறியுள்ளது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்களில் ஆர்டர் செய்யும் போது உள்ளே என்ன இருக்கிறது என்பது வெளியே தெரியாமல் பாதுகாப்பான பேக்கிங் மூலம் ஆர்டர்கள் டெலிவரி ஆகும் என்பதால் பலரும் ஆணுறைகளை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளனர். ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் இப்போது 140 ஆர்டர்களுக்கு ஒரு ஆர்டர் செக்ஸுவல் வெல்னெஸ் சார்ந்த பொருட்களே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களாகப் பால், தயிர், தோசை மாவு, சிப்ஸ், கூல் டிரிங்கஸ் இருக்கும் நிலையில், கிட்டதட்ட அதற்கு இணையாக ஆணுறைகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. எந்த ஊரில் அதிகம்: அதிகபட்சமாகப் பெங்களூரில் தான் செக்ஸுவல் வெல்னெஸ் சார்ந்த பொருட்கள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆணுறைகளை அதிகம் ஆர்டர் செய்த நகரமாகவும் பெங்களூர் இருக்கிறது. குறிப்பாக லேட் நைட்களில் அதாவது இரவு 10 மணி முதல் 11 மணி வரை தான் ஆணுறைகள் ஆர்டர் அதிகரிக்கிறதாம். இத்துடன் சிப்ஸ், குர்குரே ஆகிய ஸ்னாக் பொருட்கள் தான் அதிகம் ஆர்டர் செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக லேட் நைட் ஆர்டர்களில் பார்க்கும் போது, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத்தில் இருந்தே அதிக ஆர்டர் இருந்துள்ளது. ஒரே ஆர்டரில் அதிகபட்ச தொகைக்கு என்றால் அது மும்பையில் இருந்து வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த அந்த நபர் ஒரே ஆர்டரில் 15 லட்ச ரூபாய்க்குப் பொருட்களை வாங்கியுள்ளார். அதில் பெரும்பாலும் பூனை மற்றும் நாய் உணவுகளே இருந்துள்ளது. அதிவேக டெலிவரி ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தனது தளத்தில் சுவாரசிய ஆர்டர்கள் குறித்த சில விவரங்களையும் பகிர்ந்துள்ளது. அதில் டிசம்பர் 1ம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை 4500 கிலோ வெங்காயம் ஆர்டர் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டின் அதிவேக டெலிவரி என்றால் அது கொச்சியில் நடந்துள்ளது. அங்கு ஒருவர் வாழைப்பழம் மற்றும் கீரையை ஆர்டர் செய்த நிலையில், அது வெறும் 89 நொடிகளில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகையில் ஒரு ஆர்டர் என்றால் அது ஹைதராபாத்தில் இருந்து வந்துள்ளது. அங்கே ஒருவர் வெறும் 3 ரூபாய் மதிப்புள்ள பென்சில் ஷார்பனர் ஆர்டராக செய்து இருக்கிறார். அதேபோல ஹைதராபாத்தில் ஒரே மாதத்தில் 35,000 ரூபாய்க்கு ஒருவர் மாம்பழங்களை மட்டுமே ஆர்டர் போட்டு இருக்கிறார். குஜராத் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர், அக். மாதம் கொண்டாடப்படும் தந்தேராஸ் என்ற பண்டிகை சமயத்தில் சுமார் 8.32 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்களை ஆர்டர் போட்டு இருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post