இந்து அறநிலையத்துறையின் பிரபல கோயிலில் வேலை! தேதி முடிய போகுது! உடனே விண்ணப்பிங்க

post-img
கோவை: கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள்தான் கடைசி நாள். எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாகம் , கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கோவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வர் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது. எனவே தகுதியும் ஆர்வமும் இருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள் * இளநிலை உதவியாளர் - 02 * டிக்கெட் விற்பனை கிளர்க் - 01 * ரெக்கார்டு கிளர்க் (பதிவு எழுத்தர்) - 01 * தூய்மை பணியாளர்கள் - 01 என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. கல்வி தகுதி: மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு மட்டும் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் - 18,500 - 58,600 சீட்டு விற்பனை எழுத்தர் - ரூ.18,500-58,600 பதிவறை எழுத்தர்- 15,900 - ரூ.50,400 துப்புரவு பணியாளர் - ரூ.10,000-31,500 தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை கோயில் அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 3 (ஜனவரி 3)ம் தேதி கடைசி நாள்: இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் காலதாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ் காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம் கோவை மாவட்டம் - 641010. தேர்வு அறிவிப்பினை படிக்க: https://perurpatteeswarar.hrce.tn.gov.in/ - இந்த லிங்கை கிளிக் செய்யவும். * விண்ணப்பதரர்கள் இந்து மதத்தை சேர்ந்தவராகவும் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். * விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். * விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். * தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். * விண்ணப்பங்களுடன் அசல் சான்றிதழ் அனுப்பக் கூடாது. அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக இருக்க வேண்டும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post