ஓபிஎஸ் காற்று ரஜினி பக்கம் வீசுவது ஏன்? ரஜினி வீட்டில் நடந்தது என்ன?

post-img
சென்னை: இதுவரை எப்போதும் இல்லாத ஒரு புதிய நடைமுறையாகப் புத்தாண்டை ஒட்டி ரஜினிகாந்தை ஓபிஎஸ் திடீரென்று சந்தித்து வாழ்த்து பெற்றது ஏன் ? அதன் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் கணக்கு என்ன என்பது பற்றி சில தகவல்கள் கிடைத்திருக்கிறன. அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமிதான் என அக்கட்சி தொண்டர்கள் நம்பிக் கொண்டிருந்த வேளையில் திடீரென்று இப்போது ஓபிஎஸ் பக்கம் கொஞ்சம் காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தின் உரிமையைக் கேட்டு அவர் மனு அளித்திருக்கிறார். அதற்குப் பதில் மனு எடப்பாடி பழனிசாமி அளித்திருக்கிறார். ஆகவே, எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் சின்ன முடங்க வேண்டிய நிலை உருவானதைப் போல ஒருநிலை ஏற்படலாம் என்கிறார்கள். இதே நிலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமயம் நடந்தது. சசிகலா ஒரு தரப்பு, ஓபிஎஸ் ஒரு தரப்பு என பிரிந்ததால் இரட்டை இலை ஒதுக்க தேர்தல் ஆணை முன்வரவில்லை. பின் சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்தார்கள். மீண்டும் ஆட்சி நடந்தது. அடுத்து ஒபிஎஸ் நீக்கப்பட்டார். இபிஎஸ் கட்சியைக் கைப்பற்றினார். ஆனால், அதை எதிர்த்து நீதிமன்றம் போனார். 2021 டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக் குழுவின் முடிவை மட்டுமே சரியானது. அப்போது தான் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். எனவே அதை ஆணையம் ஏற்கவேண்டும் என ஓபிஎஸ் கோரினார். அதற்கு உடனடியாக ஒரு தீர்வு வரவில்லை. 2024 தேர்தலில் இபிஎஸ் அணி இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுத் தேர்தலே முடிந்துவிட்டது. ஒபிஎஸ் சுயேச்சையாக நின்று தோல்வி அடைந்துவிட்டார். இப்போது தேர்தல் ஆணைய இணையதளத்தில் 2021 ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஆவணம்தான் பதிவில் இருக்கிறது. ஆனால், இப்போது தேர்தல் ஆணையம் மீண்டும் நீதிமன்ற அழுத்தம் காரணமாக விசாரிக்க முன்வந்துள்ளது. இந்த நீதிமன்ற பழைய சர்ச்சையை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிடுவோம். இப்போது 2024 மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் 'படிவம் பி'யில் கையெழுத்துப் போட்டுள்ளார். அதில் ஓபிஎஸ் கையெழுத்து இல்லை. தேர்தல் ஆணையம் அனுமதித்ததால்தான் இபிஎஸ் கையெழுத்துப் போட்டுள்ளார். அப்படி எனில் 6 மாதங்கள் முன்பு தேர்தல் ஆணையம் என்ன நிலைப்பாடு எடுத்ததோ அதுதான் இன்றைக்கும் நடைமுறையில் இருக்க முடியும். அப்படி இருந்தும் இந்த சிக்கல் ஏன் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் யார் மனு போட்டாலும் அதற்கு நீதிமன்றம் உரிய தரப்பின் விளக்கத்தைக் கேட்கும். அப்படித்தான் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுள்ளது. இதன் நடுவேதான் ஓபிஎஸ் ரஜினியைச் சந்தித்துள்ளார். இதுவரை ஒரு புத்தாண்டு நாளில் கூட ரஜியை சந்தித்து ஓபிஎஸ் வாழ்த்து பெற்றதே இல்லை. இது புதிய வழியாக இருக்கிறது. ஏன் அவர் திடீரென்று சந்தித்தார்? அது பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளித்துள்ள பேட்டியில், "ரஜினி முன்பே ஜானகியின் நூற்றாண்டு விழாவில் 'இரட்டை இலை' சின்னம் என்பது ஒரு பிரமாஸ்திரம் என்று பேசி இருந்தார். அது எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட விழா. அவருக்கு எடப்பாடியுடன் ஒரு தொடர்பு உள்ளது. ஓபிஎஸ் இடமும் தொடர்பு இருக்கிறது. சொல்லப் போனால் தமிழக அரசியல் சர்ச்சையில் ரஜினி ஒரு மத்தியஸ்தராக இருக்கிறார் என்பதுதான் உண்மை. ரஜினிகாந்திற்கு ஒரு செல்வாக்கு இருக்கிறது. அவரை ஓபிஎஸ் சந்தித்தால் அது செய்தியாகும். அதன் மூலம் ஒரு மைலேஜ் கிடைக்கும். அதற்கு மேல் இதில் ஒன்றும் இல்லை. 2024 இல் படிவம் பி மற்றும் ஏ ஆகிய இரண்டிலும் எடப்பாடிதான் கையெழுத்துப் போட்டு இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் முன்பே அளித்துவிட்டது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி தரப்புதான் இறுதியாக வெற்றி பெறும்" என்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post