மனைவியின் உடல்.. தனிப்பட்ட விஷயங்களில் கணவர் தலையிடக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

post-img
அலகாபாத்: மனைவியின் அனுமதியின்றி அந்தரங்க செயல்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளத்திலும் உறவினர்களுக்கும் பகிர்ந்த கணவனுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. மனைவியின் உடல் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. பழமைவாத மனநிலையை கணவன்கள் கைவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மனைவிக்கு தெரியாமல், சம்மதம் தெரிவிக்காமல் ரகசியமாக அந்தரங்க செயல்களை வீடியோ பதிவு செய்து, அதை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து, மனைவியின் உறவினருடன் பகிர்ந்து கொண்டதாக கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கை தனிநீதிபதி வினோத் திவாகர் விசாரித்தார். அப்போத கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு எதிரான எப்ஐஆரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டதுடன், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67B இன் கீழ் வழக்கின் உத்தரவு மற்றும் முழு குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். சட்டப்பூர்வ திருமணமான கணவர் என்பதால் பிரிவு 67B ஐடி சட்டத்தின் கீழ் எந்த குற்றமும் செய்யப்படவில்லை என்றும் கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், கணவரின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், புகார்தாரர். மனுதாரரின் சட்டப்பூர்வ திருமணமான மனைவியாக இருந்தாலும், அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை பரப்புவதற்கு அவருக்கு உரிமை இல்லை என்றும் வாதிட்டார். தனது கணவரின் இத்தகைய செயலை அவரது உறவினர் மூலமே மனைவி அறிந்துள்ளார் என்றும் கூறினார். வாதங்கள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிவினோத் திவாகர், " மனைவி என்பது கணவரின் நீட்சி அல்ல, மனைவியின் உடல் அவருடைய சொந்த சொத்து, அவளுடைய தனிப்பட்ட மற்றும் நெருக்கமான வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அவருடைய சம்மதம் முதன்மையாக வேண்டும். கணவரின் பங்கு என்பது எஜமானர் அல்லது உரிமையாளரின் பங்கு கிடையாது. ஆனால் மனைவியின் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் அவரின் தனித்துவத்தை மதிக்கும் ஒரு சமமான பார்ட்னர் ஆவார். அப்படிப்பட்ட நிலையில், மனைவிக்கு உரிய இந்த உரிமைகளை கட்டுப்படுத்துவது அல்லது அவரது உரிமைகளை மீறும் முயற்சிகள் மற்றும் துஷ்பிரயோகம் செய்வது அல்லது அந்தரங்க விவரங்களை பகிர்வது என்பது நம்பிக்கை மற்றும் சட்டத்தின்படி பார்த்தால் தவறு. திருமணம் என்பது கணவருக்கு மனைவி மீது உரிமையையோ அல்லது அவரது மனைவியின் மீதான கட்டுப்பாட்டையோ வழங்காது. மேலும் திருமணம் என்பது மனைவியின் தனிப்பட்ட விஷயங்கள் அல்லது தனியுரிமைக்கான உரிமையை நீர்த்துப்போகச் செய்யாது. ஃபேஸ்புக்கில் நெருக்கமான வீடியோவைப் பதிவேற்றியதன் மூலம்,மனுதாரர் திருமண உறவின் புனிதத்தன்மையை கடுமையாக மீறியுள்ளார். கணவரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post