அவங்க அவங்க எடுக்குற முடிவு..நமக்கு சாதகமாத்தான் இருக்கு! மோதும் உலக நாடுகள்! இந்தியாவிற்கு ஜாக்பாட்

post-img
சென்னை: உலக அளவில் பல நாடுகள் அடுத்தடுத்து மோதிக்கொள்ள தொடங்கி உள்ளன. ஒன்று அது இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதலாக உள்ளது, சில நாடுகளின் குழு மோதலாக உள்ளது அல்லது உள்நாட்டு மோதலாக உள்ளது. இந்தியா என்பது எப்போதும் அணிசேரா நாடுதான். சில போர்களில் ஏதாவது சில நாடுகளுக்கு இந்தியா நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளது. ஆனால் இந்தியா நேரடியாக எந்த நாட்டையும் சப்போர்ட் செய்தது இல்லை. இந்த முறையும் இந்தியா எந்த நாட்டையும் ஆதரிப்பது இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உலக நாடுகளுக்கு இடையில் நடக்கும் மோதல் இந்தியாவிற்கு சாதகமாக மாறி உள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் - ஈரான் இடையிலான மோதல் உச்சம் அடைந்தது. ஈரானின் மிக முக்கியமான அஸ்திவாரத்தை இஸ்ரேல் நிர்மூலம் ஆகி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்தது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்.. ஈரானின் ரேடார் சிஸ்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் மையங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான் மீதான இந்த தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாக கண்டித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ளது போலவே பாகிஸ்தானில் தாலிபான் அமைப்பு உள்ளது. இந்த தாலிபான் அமைப்பின் ரகசிய தாங்கும் இடங்கள், தளவாடகங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்று பாகிஸ்தானின் தலிபான்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பாகிஸ்தான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கும் - இவர்களுக்கும் ஆகாது. பாகிஸ்தான் ராணுவத்திரும் இவர்களுக்கும் கூட மோதல் உள்ளது. பாகிஸ்தானில் தலிபான் ஆட்சியை நிறுவ வேண்டும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். அதற்காக, பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாகத் தாக்கி, அரசியல்வாதிகளைக் கொன்று பாகிஸ்தானை சீர்குலைக்கும் பணியே டிடிபி அமைப்பின் முக்கிய குறிக்கோள் ஆகும். பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தாக்குதல் நடத்துவதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இவர்களுக்கு சொந்தமான தளவாடங்களில் திடீரென பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் கண்டனம்: தாலிபான் மீதான இந்த தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாக கண்டித்து உள்ளது. கனடாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அங்கே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது. உட்கட்சி பிரச்சனை, மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ட்ரூடோ ஏப்ரல் மாதத்திற்கு முன்பு ராஜினாமா செய்ய 80% வாய்ப்பு உள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கனடிய தலைவர்கள் மற்றும் அவரது சொந்த கட்சியினரிடையே கருத்துக்கள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன. ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறாராம். ஏற்கனவே நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கே நிதி நிர்வாகம் தொடங்கி கடன் பிரச்சனை வரை பல விஷயங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்த சில வாரங்களில் இதனால் ஜஸ்டின் ராஜினாமா செய்யலாம். கனடாவின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், நாட்டின் எதிர்காலம் குறித்து ட்ரூடோவுடன் ஆலோசனை செய்ததில்.. ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், நிதி நிலைமையில் நிலவும் சிக்கல்கள் காரணமாக தனது ராஜினாமாவை அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தில், ட்ரூடோ மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளார். வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த போராட்டம் கலவரம் உள்நாட்டு போர் போல மாறிய நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்தார். வங்கதேச பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்தனர். இதையடுத்து அங்கே ஆட்சி கவிழ்ந்தது. அதோடு ஷேக் ஹசீனா டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டார். இதையடுத்து வங்கதேச நாட்டின் மூத்த ஆலோசகராக முகமது யூனுஸ் களமிறக்கப்பட்டார். இப்போது உள்ளே அங்கே மியான்மரின் அரக்கன் ஆர்மி உள்ளே நுழைந்து நாட்டை கைப்பற்றும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. 50 வருடமாக நிலவி வந்த.. சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்தது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடினார். அங்கே ஆட்சி கவிழ ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற போராளி குழுதான் காரணம். அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. அபு முகமது அல்-ஜோலானி அந்நாட்டின் அதிபர் ஆகி உள்ளார். சிரியாவில் 50 வருடமாக ஆசாத் குடும்பம்தான் ஆட்சி செய்து வந்தது. 1960 தொடக்கத்தில் சிரியாவில் ஒற்றை ஆட்சி முறை வழக்கத்திற்கு வந்தது. ஹபீஸ் அல் அசாத் ஆட்சியில் நிலையாக உட்கார்ந்தார். அதன்பின் அவர் மகன் ஆண்டு வந்தார். இந்த குடும்ப ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. அரசியல் நெருக்கடி காரணமாக பிரான்ஸ் அரசு கவிழ்ந்து உள்ளது. பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரதமர் மைக்கேல் பார்னியர் தோல்வி அடைந்ததை அடுத்து, பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. அவர் அதிபர் இம்மானுவேல் மக்ரோனால் நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து உள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியது, வரவு செலவில் முறைகேடுகளை செய்ததாக கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1962-க்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாட்டின் அரசாங்கம் கவிழ்வது இதுவே முதல் முறையாகும். சமீபத்தில்தான் தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தொலைக்காட்சியில் தோன்றி தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் அறிவித்தார். ஜனநாயக நாடான தென்கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன்பின் அதை அவர் வாபஸ் வாங்கினார். அவரின் அவசர நிலை அறிவிப்பிற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாததால் அவசர நிலை திரும்ப பெறப்பட்டது. அங்கே ஆட்சி கவிழும் நிலை உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post