இஸ்ரோவில் விஞ்ஞானிகளின் மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா? விண்வெளி நிறுவனத்தில் சேர தகுதிகள் என்ன?

post-img
பெங்களூர்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் இஸ்ரோ நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? அனுபவமே இல்லாமல் புதிதாக சேர்பவர்களுக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் என்ன சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். விண்வெளி துறை என்பது விந்தையிலும் விந்தையான துறை! பூமி, ஆகாயம், சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் என அனைத்து அற்புதங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் துறை. அவற்றின் செயல்பாடுகள், அவற்றின் சாதக பாதகங்களை அறிவது என இந்த துறை குறித்து சொல்லிக் கொண்டே செல்லலாம். நிலவின் தென் துருவத்தில் இந்தியா காலடி எடுத்து வைத்ததன் மூலம் மிகப் பெரிய மைல்கல்லை அடைந்துள்ளது என கூறலாம். இவை அத்தனைக்கும் பின்புலத்தில் இருப்பது கூட்டு உழைப்பு! மற்ற கிரகங்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட விண்வெளி விஞ்ஞானிகள் பாடுபடுகிறார்கள் என்றால் அந்த கிரகங்களுக்கே சென்று ஆய்வுகளை விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி உள்ளது. மூன்றாவது இடத்தில் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உள்ளது. இவை தவிர்த்து இந்தியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் விண்வெளித் துறையில் சாதித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் விண்வெளி நிறுவனம் என்றால் அது இஸ்ரோ. இதன் தலைமையகங்களில் முக்கியமானது பெங்களூர், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஆகும். செயற்கைகோள் ஏவப்படுவது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான். இங்குதான் பெரிய அளவிலான விண்வெளி ஏவுதளம் உள்ளது. இஸ்ரோவின் தலைமையகம் என்றால் அது பெங்களூரில் உள்துதான். தங்கள் மூளையை கசக்கி பிழிந்து, தன்னலம், குடும்ப நலம் என அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு இந்தியாவின் வளர்ச்சிக்காக ஆராய்ச்சியில் முழு வீச்சில் பல்வேறு விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு எந்த மாதிரியான ஊதியம் வழங்கப்படுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 7ஆவது ஊதியக் குழுவின்படி ஒரு விஞ்ஞானிக்கு அடிப்படை ஊதியமாக ரூ 56,100 நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி ரூ 80 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும். அடிப்படை ஊதியம் தவிர அகவிலைப்படி, வீட்டு வாடகை உள்ளிட்ட பலன்களும் கிடைக்கும். சிறப்பான விஞ்ஞானிகளுக்கு ரூ 67 ஆயிரம் முதல் ரூ 79 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. பொறியாளருக்கு ரூ 37,400 முதல் ரூ 67 ஆயிரம் வரையும் 15,600 ரூபாய் முதல் 39,100 ரூபாயும் வழங்கப்படுகிறது. இஸ்ரோ விஞ்ஞானகளுக்கு மருத்துவ காப்பீடு, விடுமுறை பயண பலன்களும் வழங்கப்படும்.ஏதேனும் விண்வெளி திட்டங்களில் செயல்படும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அங்கீகாரமும் கிடைக்கும். இஸ்ரோவில் பணிக்கு சேர பி.இ. அல்லது பி.டெக் படிப்பில் 65 சதவீதம் பெற்றிருத்தல் வேண்டும். பிளஸ் 2 முடித்துவிட்டு ஜேஇஇ அட்வான்ஸுடு, கிஷோர் வைக்கியாநிக் பிரோட்ஷஹான் யோஜனா அல்லது மாநில மற்றும் மத்திய அரசின் திறனறித் தேர்வு ஆகிய 3 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இஸ்ரோவில் இணையலாம். இந்த திறனறித் தேர்வுகள் ஆசியாவின் முதல் விண்வெளி பல்கலைக்கழகமான திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post