டைனோசர்கள் பயன்படுத்திய ஹைவே! ஆய்வாளர்கள் கண்டுபிடித்த அதிசயம்.. அடேங்கப்பா எவ்வளவு பெருசு

post-img
லண்டன்: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து அழிந்து போன டைனோசர்களின் காலடி தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்புகள் டைனோசர்கள் குறித்த மேலும் அதிகமான தகவல்களை தெரிந்துக்கொள்ள உதவும். டைனோசர்கள்: மனித இனம் தோன்றுவதற்கு பல லட்சம் வருடங்களுக்கு முன்னதாகவே டைனோசர்கள் உருவாகிவிட்டன. அளவில் பெரியதாகவும் வேட்டையாடி உண்ணும் குணாதிசயங்களுடனும் சில வகை டைனோசர்கள் தாவர உண்ணியாகவும் வாழ்ந்திருந்தன. இவற்றில் குறிப்பிட்ட வகை டைனோசர்கள் பறக்க கூடியதாக கூட இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவையெல்லாம் இதுவரை கிடைத்த புதை படிமங்களை ஆய்வு செய்த போது தெரிய வந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக டைனோசரின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று இரண்டு தடங்கள் அல்லாமல் பல கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கால் தடங்கள் பதிவு செய்யப்பட்ட இடம் டைனோசர்கள் அதிக அளவில் பயன்படுத்திய பாதையாக இருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள், இந்தப் பாதைகள் டைனோசரின் ஹைவேவாக (HIGHWAY) இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆக்ஸ்போர்டு மற்றும் பர்பிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த காலடித்தடங்கள் சுமார் 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. டைனோசர்கள் எப்படி அழிந்தன?: டைனோசர்கள் உருவானது எப்படி மனிதர்களுக்கு தெரியாதோ, அதேபோல அது அழிந்தது குறித்தும் மனிதர்களுக்கு முழுமையான விவரங்கள் கிடைக்கப்படவில்லை. ஆனால் விண்கல் மோதல் காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது சில லட்சம் வருடங்களுக்கு முன்னர் பெரிய சைஸ் விண்கல் ஒன்று பூமியை தாக்கி இருக்கிறது. இந்த தாக்குதலால் பேரழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. நிலநடுக்கம், காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு போன்றவை இந்த விண்கல் வெடிப்பால் உருவாகியிருக்கிறது. விண்கல் மோதல்: இதில் எரிமலை வெடிப்பும் காட்டு தீயினால் ஏற்பட்ட புகையும் சேர்ந்து டைனோசர்களை அழித்திருக்கின்றன. அதாவது டைனோசர்கள் பெரிய நுரையீரல் கொண்ட அளவில் பெரியதான மிருகமாகும். இவை சுவாசிப்பதற்கு போதுமான அளவில் ஆக்சிஜன் அவசியம். ஆனால் காட்டுத் தீயும், எரிமலை வெடிப்பும் சேர்ந்து வளிமண்டலத்தில் புகையை தான் உருவாக்கி வைத்திருந்தன. இந்தப் புகை வளிமண்டலத்தை முழுமையாக மூடி சூரிய ஒளி பூமி மீது படாமல் செய்தது. கடைசி காலம்: சூரிய ஒளி இல்லாத காரணத்தால் தாவரங்களால் உயிர் வாழ முடியவில்லை. எனவே தாவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்கின. இது தாவரங்களையே நம்பி இருக்கும் செட்டியோசரஸ் எனும் தாவர உண்ணி டைனோசர்களை அழிவு பாதைக்கு கொண்டு சென்றது. பசி பட்டினியால் தவித்த இந்த வகை டைனோசர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு திணறி இறந்தன. தாவர உண்ணிகள் இறந்ததை அடுத்து மாமிசம் உண்ணிகள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து இறக்கத் தொடங்கின. இப்படியாக டைனோசர் காலம் உலகத்தில் முடிவுக்கு வந்தது. இந்தியாவிலும் டைனோசர் வாழ்ந்ததற்கான சில ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் பிரிட்டனில் டைனோசர்களின் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தம் ஐந்து காலடி தட வழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. முதல் நான்கு வழிகள் சைவ உண்ணி டைனோசர்களுடையது என்றும், ஐந்தாவது வழித்தடம் அசைவ உண்ணி திரோபட் டைனோசர் உடையது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post