ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை.. அதிரடியாக நடந்த தாக்குதல்.. இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

post-img
ஜெருசேலம்: காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் ஹசம் ஷாவான் படுகொலை செய்யப்பட்டுளளார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் தான் ஹஸ்ஸம் ஷாவான். தெற்கு காஸாவின் கான் யூனிஸில் உள்ள பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். காசாவில் உள ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டார்கள். இதோடு, இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் காசா முனைக்கு கடத்திச் சென்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் அமைப்பு. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்தது. போர் ஆரம்பித்தது முதலே இஸ்ரேல், காசாவில் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. காசா முனையில் இதுவரை 44 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து உள்ளார்கள். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் காசாவில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார். இதனிடையே போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த சுமார் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறி வருகிறது. காசா இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கும் நடந்தது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் ஆகியோருக்கு பிடிவாரண்ட் எல்லாம் கடந்த நவம்பரில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எதுவுமே போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை.. இஸ்ரேல் போரை தொடர்ந்து நடத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் ஹசம் ஷாவான் படுகொலை செய்யப்பட்டுளளார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனர்கள் சிலரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், காசாவின் கான் யூனிஸ் பகுதியில் மனிதாபிமான மண்டலத்தில் வசித்த, ஷாவான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைத் தாக்குதல்களில் ஹமாஸின் ராணுவப் பிரிவுடன் ஷாவான் இணைந்து செயல்பட்டு வந்தார் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. முன்னதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், இந்த வார தொடக்கத்தில், ஹமாஸ் படைப்பிரிவின் தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டார். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு சபா தான் தலைமை தாங்கியிருந்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post