மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த பேருந்து நள்ளிரவில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 30 பேர் படுகாயம்

post-img
விழுப்புரம்: மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த பேருந்து, நள்ளிரவில் திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்தவகையில் விழுப்புரம் கல்வராயன் மலை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஒரு பேருந்தில், மேல்மருவத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில், திருக்கோவிலூர் அருகே அருதங்குடிபுதூரில் மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு 1 மணியளவில், கல்வராயன் மலைவாழ் மக்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதை அறிந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கும், மற்றவர்களை அவரவர் இல்லங்களுக்கும் தமது ஏற்பாட்டில் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post