ரொம்ப அவசரம்.. தோனி செய்ததை ரோஹித்தும்.. சச்சின் செய்ததை ஏன் கோலியும்.. செய்ய வேண்டும் தெரியுமா?

post-img
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இதற்கு முந்தைய பார்டர் கவாஸ்கர் தொடர்களில் வரிசையாக வென்ற இந்திய அணி ரோஹித் தலைமையில் மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளது. இந்த தொடரில் இந்த முறை.. இந்தியா வென்றது ஒரே ஒரு மேட்ச். அது பும்ரா கேப்டனாக இருந்த மேட்ச். இதை தவிர மற்ற ஆட்டங்களில் வரிசையாக இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது. ஒரு கேப்டனாக.. பேட்ஸ்மேனாக அடுத்தடுத்து மிக மோசமாக ரோஹித் சர்மா சொதப்பி விட்டார். அதேபோல் இந்திய அணியின் மிக முக்கியமான பேட்ஸ்மேனான கோலியும் அடுத்தடுத்து ஆப் சைடில் போன பந்திற்கு பேட்டை விட்டு அவுட்டாகி உள்ளார். இவர்கள் இருவரின் சொதப்பலான ஆட்டங்களும் இந்தியாவின் தோல்விக்கு முக்கியமான் காரணம் ஆகும். இந்த தொடர் மூலம் ஒரு விஷயம் தெளிவாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி செய்ததை ரோஹித்தும்.. சச்சின் செய்ததை ஏன் கோலியும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. தோனி செய்தது என்ன?: மகேந்திர சிங் தோனி, டிசம்பர் 2014 இல், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றார். தொடர் நடந்து கொண்டிருந்த போதே ஓய்வு பெற்று நான்காவது டெஸ்ட் ஆடும் முன் தொடரில் இருந்து வெளியேறினார். இந்த முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, ஏனெனில் ஒரு கேப்டன் தொடரின் நடுப்பகுதியில் இருந்து விலகுவது வழக்கத்திற்கு மாறானது. தோனி மூன்று பார்மட் போட்டிகளிலும் விளையாடுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறினார். நான்காவது டெஸ்டில் அணியை கோலி வழி நடத்தினார். விராட் கோலியிடம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து தோனி ஓய்வு பெற்றார். அதன்பின் இந்தியாவின் முழுநேர டெஸ்ட் கேப்டனாக கோலி ஆனார். அதேபோல் இப்போது ரோஹித் தொடருக்கு இடையே ஓய்வு பெற்று இருக்க வேண்டும். இப்போது தொடர் முடிந்துவிட்டது. இனி அட்லீஸ்ட் ரோஹித் ஓய்வு பெற வேண்டும். . ஒரு கேப்டனாக.. பேட்ஸ்மேனாக அடுத்தடுத்து மிக மோசமாக ரோஹித் சர்மா சொதப்பி விட்டார். இதனால் ரோஹித் சர்மா தோனி செய்ததை இப்போது செய்து பும்ராவிற்கு கேப்டன்சியை தர வேண்டும். சச்சின் செய்தது? அதேபோல் ஒரு காலத்தில் சச்சின் தொடர்ந்து ஆப் சைடில் போன பந்தை அடிக்க முயன்று அவுட் ஆனார். இப்படிப்பட்ட நிலையில் 2004இல் SCG இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் ஆப் சைடிலேயே அடிக்காமல் 241 ரன்கள் எடுத்தார். டெண்டுல்கர் வேண்டுமென்றே கவர் டிரைவ்களை விளையாடுவதைத் தவிர்த்து,.. விக்கெட் ஆகாமல் 241 ரன்கள் எடுத்தார். இது அவரது ஒழுக்கம் மற்றும் அவரது அணியின் வெற்றிக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது. ஈகோ பார்க்காமல்.. அடித்தே தீருவேன் என்று நினைக்காமல் சச்சின் நிதானமாக ஆடி 241 ரன்கள் எடுத்தார். இப்போது சச்சின் செய்ததை கோலி செய்ய வேண்டும். இந்திய அணியின் மிக முக்கியமான பேட்ஸ்மேனான கோலியும் அடுத்தடுத்து ஆப் சைடில் போன பந்திற்கு பேட்டை விட்டு அவுட்டாகி உள்ளார். இதை தவிர்க்க சச்சின் போல கொஞ்சம் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டிய கட்டாயம் கோலிக்கு ஏற்பட்டு உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post