காலம் வேகமாக சுழலுது பாருங்க! இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களை விட.. அதிக நிலம் வாங்கிய இந்தியர்கள்

post-img
லண்டன்: லண்டனில் தற்போது ஆங்கிலேயர்களை விட இந்தியர்கள்தான் அதிக நிலம் வைத்து இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலகம் முழுக்க பல நாடுகளில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் அதிகம் உள்ளன. கனடாவில் சிங், தமிழர்கள், அமெரிக்காவில் தெலுங்கு, தமிழர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் மலையாளிகள் என்று இந்தியர்கள்தான் எங்கே போனாலும் இருக்கிறார்கள். அதிலும் குஜாத்தியர்கள் பலர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன. தினம் தினம் பல நூறு பேர் இதில் கைதாகிறார்கள். உலகம் முழுக்க இப்படி பல நாடுகளில் இந்தியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் லண்டனில் தற்போது ஆங்கிலேயர்களை விட இந்தியர்கள்தான் அதிக நிலம் வைத்து இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது இங்கிலாந்தை சேர்ந்தவர்களை விட இந்தியர்கள்தான் அங்கே அதிகம் நிலம் வைத்து உள்ளனர். சமீபத்தில்தான் இங்கே விராட் கோலி குடியேற போவதாக செய்திகள் வந்தன. லண்டனை தளமாகக் கொண்ட குடியிருப்பு மேம்பாட்டாளர் நிறுவனமான பாராட் லண்டனின் கூற்றுப்படி, லண்டனில் உள்ள சொத்து உரிமையாளர்களின் மிகப்பெரிய குழுவாக இந்தியர்கள் உள்ளனர். இந்த குழுவில் பல தலைமுறைகளாக இங்கிலாந்தில் வசிக்கும் நபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIகள்) உள்ளனர். இந்தியாவை சேர்ந்த முதலீட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விக்காக இங்கிலாந்துக்குச் செல்லும் குடும்பங்களை உள்ளடக்கியது. ஆங்கிலேயர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் உள்ளனர். இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் வசிக்கும் இந்திய முதலீட்டாளர்கள் லண்டனில் அதிகம் வீடுகளைவாங்குகிறார்கள் . ஒன்று, இரண்டு அல்லது மூன்று படுக்கையறைகள் கொண்ட சொத்துக்காக GBP 290,000 முதல் GBP 450,000 வரை செலவழிக்கத் தயாராக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர்கள் கூட இவ்வளவு செலவு செய்ய விரும்புவது இல்லை. புள்ளிவிபரப்படி லண்டனில் 30 சதவீத வீடுகள் விற்பனையானது வெளிநாட்டினரால் வாங்கப்படுகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க விரும்பும் இந்திய முதலீட்டாளர்கள் அதிகம். அங்கே வீடு விற்பனையில் 30 சதவீத வீடுகளை வாங்குபவர்கள் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து வருகிறார்கள். நைட் ஃபிராங்க் நிறுவனத்தில் சர்வேயில் 10% இந்தியாவின் பணக்கார லண்டனில் குடியேறுவதையே அதிகம் விரும்புகின்றனர். உள்நாட்டு ரியல் எஸ்டேட் சந்தையில் இந்தியர்கள் ஆதிக்கமே அதிகம் உள்ளது. UK, UAE மற்றும் அமெரிக்காவில் அதிகமாக இந்தியர்களே நிலங்களை வாங்குகின்றனர். இந்தியர்களிடம் நிறைய சேமிப்பு உள்ளது. நிறைய நிதி உள்ளது. அவர்களின் வருமானம் அதிகம் உள்ளது. அதோடு பொருளாதார ரீதியான முடிவுகளை சரியாக மேற்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதுவே அவர்கள் லண்டனில் அதிகமாக அவர்கள் நிலம் வாங்க காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஒரு சதுர அடி விலை லண்டனுக்கும் மும்பைக்கும் இடையே மிகவும் ஒத்திருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக வருவாய் விகிதம் மற்றும் பாதுகாப்பான சந்தை என்பதால் இந்தியாவில் நிலம் வாங்குவோர் இங்கிலாந்து குடியிருப்பு சந்தையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மும்பையில் நிலம் வாங்குவதற்கு பதிலாக அதே விலைக்கு நல்ல நிலம் மட்டுமின்றி பாதுகாப்பு, சுற்றுசூழல் வழங்கும் லண்டன் சிறந்தது என்று இந்தியர்கள் லண்டனில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post