கணவரை மோசமாக நடத்திய மனைவி! தாங்க முடியாத இம்சையில் சிக்கிய தொழிலதிபர்.. பிரபல விபிஐ இப்படி பண்ணலாமா

post-img
டெல்லி: பெங்களூரில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு இன்னமும் அடங்காத நிலையில், நாட்டின் தலைநகரில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான விசாரணையை டெல்லி போலீசார் நடத்தி கொண்டிருக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய, பெண்களை அச்சமின்றி வாழ வைக்கக்கூடிய வகையில் எத்தனையோ சட்டங்கள் நம்முடைய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.. ஆனாலும், பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளதை மறுக்க முடியாது. அதேசமயம், இதுபோன்ற சட்டங்களை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி சில பெண்கள் பயன்படுத்தி கொள்வதும் ஆங்காங்கே நடக்கிறது. கடந்த மாதம் வழக்கு ஒன்றை விசாரித்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். திருமணம் ஆன பெண்ணை, தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டுதல் அல்லது கொடுமை படுத்துதல் அல்லது உயிருக்கு, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலை செய்யும் கணவர் அல்லது குடும்பத்தினருக்கு எதிரான சட்ட பிரிவுதான் 498A ஆகும்... ஆத்திரம்: இந்த இந்திய சட்ட பிரிவு 498A வை, கணவன் மற்றும் அவனது குடும்பத்திற்கு எதிராக தனிப்பட்ட வகையில் பழிவாங்கும் விதமாக பெண்கள் பலர் தவறாக பயன்படுத்துவதாகவும், தங்களுக்கு இருக்கும் பர்சனல் ஆத்திரங்களை தீர்க்க இந்த சட்டத்தை சில பெண்கள் இப்படி பயன்படுத்துகிறார்கள் என்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் வருத்தத்துடன் கூறியிருந்ததை இங்கு நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் இணை நிறுவனர் புனித் குரானா...இவருக்கு 40 வயதாகிறது.. மாடல் டவுன் கல்யாண் விஹார் பகுதியில் இவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் மனிகா ஜகதீஷ் பஹ்வா.. கடந்த 2016ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்துள்ளது. ஆனால், கல்யாணமானதிலிருந்தே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. வாக்குவாதம்: அதாவது, தம்பதி இருவரும் சேர்ந்து ஹோட்டலை நடத்தி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த ஹோட்டலை யார் நிர்வகிப்பது என்பதில் இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது.. நாளுக்கு நாள் இதுவே தம்பதிக்குள் மிகப்பெரிய தகராறாக உருவெடுத்துள்ளது. இதனால் 2 வருடங்களுக்கு முன்பு , மனைவியை பிரிந்து, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டாராம் புனித். இறுதியில், இருவரும் விவாகரத்து வரை சென்றுவிட்டனர். இது சம்பந்தமாக இருவரும் கோர்ட்டை நாடியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், தன்னுடைய ரூமில் இந்த தொழிலதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. டார்ச்சர்: தங்கள் மகனின் மரணத்துக்கு, அவரது மனைவி தந்த டார்ச்சர்தான் காரணம் என்கிறார்கள் புனித்தின் பெற்றோர்.. தினம்தினம் தன்னுடைய கணவரை, மனரீதியாக டார்ச்சர் செய்து வந்தாராம் மனைவி. அளவுக்கு மீறிய சித்ரவதைதான், தங்கள் மகனின் தற்கொலைக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் புனித்தின் குடும்பத்தினர். மனைவி மட்டுமல்லாமல், மாமியாரும் மருமகனை துன்புறுத்தி வந்தாராம். அதேபோல, மனைவியின் சகோதரனும், புனித்தை கடுஞ்சொற்களால் வசைபா வந்திருக்கிறார். அதாவது, "உன்னால் எதுவுமே செய்ய முடியாது.. தைரியம் இருந்தால் தற்கொலை செய்துட்டு செத்து போ" என்று மனைவியின் சகோதரன் கூறினாராம். புனித்தின் தற்கொலைக்கு இதுவும் காரணம் என்கிறர்கள். திடீர் முடிவு: புனித்தின் உடலை போஸ்ட் மார்ட்த்துக்கும் அனுப்பி வைத்துள்ள போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து வடமேற்கு துணை காவல் ஆணையர் (டிசிபி) பிஷ்ம சிங் சொல்லும்போது, "டிசம்பர் 31ம் தேதி சாயங்காலம் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும், போலீஸ் குழு ஒன்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. அப்போது உயிரிழந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கழுத்து இறுகியதற்கான காயங்களுடன், கட்டிலில் சடலம் கிடந்துள்ளது. அவரது செல்போன் மற்றும் அவர் தொடர்பான பிற ஆவணங்களை அவரின் அப்பா, போலீஸாரிடம் தந்துள்ளார்.. அதுகுறித்த விசாரணை நடத்தப்படும்" என்றார். 15 நிமிட ஆடியோ: இதனிடையே, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, 15 நிமிட ஆடியோ பதிவு ஒன்றை புனித் பேசி வெளியிட்டிருக்கிறார்.. அதேபோல சொத்து பிரச்சனை தொடர்பான, 54 நிமிட வீடியோ ஒன்றையும் தற்கொலைக்கு முன்பு வெளியிட்டதாக சொல்கிறார்கள்.. இந்த வீடியோ, ஆடியோ அனைத்துமே இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படித்தான், கடந்த மாதம் பெங்களூரிலும் ஒரு சம்பவம் நடந்தது. ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டார். மனைவி, மாமியார், மச்சினர் என்று அனைவருமே சுபாஷை டார்ச்சர் செய்துள்ளனர்.. மன உளைச்சலில் இருந்த அதுல், இறுதியில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து 24 பக்க கடிதம் எழுதி வைத்ததுடன், 90 நிமிட வீடியோவையும் வெளியிட்டிருந்தார். வரதட்சணை கொடுமை: அந்த அதிர்ச்சி மறைவதற்குள் இன்னொரு தொழிலதிபர், மனைவி டார்ச்சர் தாங்காமல் தற்கொலை செய்துள்ளார். ஆண்கள் எதிர்கொள்ளும் வரதட்சணை குறித்த புகார் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல தொழிலதிபரின் தற்கொலை தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post