அமெரிக்காவில் இந்தியர்கள் செய்யும் தரமான சம்பவம்! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது! வியக்கும் உலகம்

post-img
நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை வெறும் 1.4 சதவிகிதம்தான். ஆனாலும் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்கள் அளிக்கும் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மீதான மதிப்பை அதிகரித்திருக்கிறது. அமெரிக்க வாழ் இந்தியர்கள்: வேலை தேடி அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இன்றைய தேதியில் சுமார் 50 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இந்தியர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனாலும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். அமெரிக்க குடும்பங்களின் சராசரி ஊதியத்தை விட, அங்கு வாழும் இந்தியர்கள் இரண்டு மடங்கு அதிக ஊதியத்தை பெறுகின்றனர். இந்தியாவின் பொருளாதாரம்: இந்த சம்பளத்தை கொண்டு அவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்கள். அமெரிக்க வாழ் இந்தியர்கள் செலுத்தும் வரி, அந்நாட்டுக்கு முக்கிய நிதி ஆதாரமாக இருக்கிறது. அதே நேரம் இந்தியர்கள் திறமைசாலியானவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பதால் அமெரிக்காவுக்கு இந்தியர்களின் உழைப்பு மிகுந்த அவசியமானதாக இருக்கிறது. மறுபுறம், இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பப்படும் பணம் இந்திய பொருளாதாரத்திற்கு வலுவூட்டுகிறது. அமெரிக்கா மட்டுமல்லாது, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளிலும் இந்தியர்கள் பரவி கிடக்கின்றனர். மொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 3 கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும், அந்தந்த நாடுகளுக்கு தங்கள் உழைப்பின் மூலமாகவும், அதே நேரம் வரி மூலமாகவும் வசிக்கும் பங்களிக்கிறார்கள். அவர்கள் அனுப்பும் பணம் இந்தியாவுக்கும் உதவுகிறது. தொழில்நுட்ப துறை: இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் முக்கியமானதாக தொழில்நுட்ப துறை இருக்கிறது. அமெரிக்காவில் கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். மட்டுமல்லாது மிகவும் வெற்றிகரமான தொழில் முனைவோர்களாகவும் இந்தியர்கள் மாறியிருக்கிறார்கள். மைக்ரோசிஸ்டம்ஸ், ஹாட்மெயில் மற்றும் ZScaler ஆகியவை இதற்கான உதாரணங்களாகும். தவிர அமெரிக்க சுகதாரத்தில் இந்தியர்களின் பங்கு கணிசமானதாக இருக்கிறது. கலாச்சாரம்: அதாவது அமெரிக்காவில் உள்ள டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களில் குறிப்பிட்ட அளவில் இந்தியர்கள் இருக்கின்றனர். மேலும் அமெரிக்காவில் இந்து கலாச்சாரத்தை இந்தியர்கள் பிரதிபலித்து வருகின்றனர். இந்தியாவின் கலாச்சாரத்தை மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தி, வளர்த்தெடுக்கும் பணியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். கலாச்சாரத்துடன் உணவு உள்ளிட்ட விஷயங்களையும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். இவை எல்லாவற்றையும் விட, அறிவியல் துறையில் இந்தியர்களின் ஈடுபாடு அளவிட முடியாததாக இருக்கிறது. STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் துறைகளில் இந்தியர்கள் அதிக பங்காற்றி வருகின்றனர். இதன் பிரதிபலிப்பாக, அதிக அளவில் அமெரிக்காவுக்கு இந்தியர்கள் கல்வி கற்க செல்ல தொடங்கியுள்ளனர். இவ்வளவு ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக இந்தியர்கள் நிற ரீதியான பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். வேலை, கல்வி உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் இந்தியர்களுக்கு இந்த பாகுபாடு பின்னடைவை கொடுப்பதாகவே இருக்கிறது. இருப்பினும் இந்தியர்களின் பங்களிப்பு அமெரிக்காவில் புறம் தள்ள முடியாததாக இருக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை போல இந்தியர்களின் உழைப்பு அசாத்தியமானதாக இருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post