புத்தாண்டு கொண்டாட்டம்.. ECR, OMR, GST சாலையில் கட்டுப்பாடுகள் என்னென்ன ? போலீஸ் விளக்கம்!

post-img
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் போது ஏற்படும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எனவே, இந்த முறை வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ECR, OMR, GST சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, "ECR, OMR மற்றும் GST சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் Beach Resorts உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டமானது 01.01.2025 தேதி 12.30 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும் கொண்டாட்டங்களும் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தல் கூடாது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது. மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் முறையே திருவிடந்தை மற்றும் SSN கல்லூரி அருகில் வாகன தணிக்கை செய்யப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான உணவகம் / தங்கும் விடுதிகளில் முறையான முன்பதிவு பெற்ற நபர்கள் மட்டுமே மாமல்லபுரம் பகுதிக்கு அனுமதிக்கப்படுபவர். இரண்டு சக்கர வாகனத்தை இயக்குபவரும் பின் அமர்ந்துவரும் நபரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும் நான்கு சக்கர வாகனத்தை இயக்குபவர் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது தக்க வழக்கு பதிவு செய்யப்படும். இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பெண்களை கேலி மற்றும் கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். மீறும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ECR, OMR மற்றும் GST சாலைகளில் புத்தாண்டு கொண்டாடும் விதமாக வாகன பந்தயம் மற்றும் சாகசத்தில் (Bike Race) ஈடுபடக்கூடாது. மீறும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்புவிக்கப்படும். மேலும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் திருவிடந்தை முதல் கல்பாக்கம் வரையிலான கடற் பகுதிகளில் குளிக்கவும் மற்றும் படகில் கடலுக்குள் அழைத்து செல்வதையும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுத்து படகுகள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் இந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் கொண்ட இந்த பண்டிகை நாட்களில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி கடந்து செல்ல காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்கள் பகுதிகளில் செயல்படும் பொழுது போக்குதலங்கள் மற்றும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அதுகுறித்தும், மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் வாகன சாகசங்களில் எடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களில் நேரடி கண்காணிப்பில் இலங்கும் HELLO POLICE எண்.7200102104, கால் கட்டுபாட்டு அறை தனிப்பிரிவு அலுவலகம் Hello Police - 044-295408880, 044-29540555/777-க்கு எவ்வித தயக்கமுமின்றி தொலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு சென்னையில் புத்தாண்டு சமயத்தின்போது எந்த வாகன விபத்துக்களும் நடக்கவில்லை. அதேநேரம், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்திருந்தது. அதேபோல இந்த ஆண்டும் விபத்தில்லா புத்தாண்டாக அமைய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post