சக்சஸ்! 470 கிமீ உயரத்தில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்ட 2 SpaDeX செயற்கைகோள்கள்! இஸ்ரோ விஞ்ஞானிகள் குஷி

post-img
ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தன. இதையடுத்து, பூமியில் இருந்து 470 கி.மீ உயரத்தில் 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ராக்கெட் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு மையத்தை நிறுவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் SPACE DOCKING பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ஸ்பேடெக்ஸ் திட்டத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். SPADEX (Space Docking Experiment) திட்டத்தின் கீழ், இரு தனித்தனி விண்கலங்களை விண்வெளியில் இணைக்கும் "டாக்கிங்" எனப்படும் தொழில்நுட்பம் சோதனை நடத்தப்பட உள்ளது. இது வெற்றிகரமாக முடிந்தால், இந்த சாதனையை படைக்கும் நான்காவது நாடாக இந்தியா இடம்பெறும். இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இரவு 10 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. PSLV-C60 ராக்கெட் மூலம் 220 கிலோ எடை கொண்ட SDX-1 மற்றும் SDX-2 எனப்படும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் பாய்ந்தன. இவை 220 கிலோ எடை கொண்டவை. இவை 470 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்படும். இந்த 2 ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 24 ஆய்வுக் கருவிகள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் போயம்-4 எனப்படும் நான்காம் நிலையில் இந்த ஆய்வுக் கருவிகள் இருக்கும். இதில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ தயாரித்தவை. எஞ்சிய 10 கருவிகளும் கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்தவை. விண்ணில் ஏவப்பட்டுள்ள 2 ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் விண்ணில் 20 கி.மீ தூரத்தில் வெவ்வேறு திசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2 விண்கலங்களில் ஒன்று Chaser மற்றொன்று Target. முதலில் இலக்கில் நிலைநிறுத்தப்படும் விண்கலத்துடன் Chaser விண்கலம் இணைக்கப்படும். சில மாதங்களுக்கு பிறகு அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த செயல்முறை தான் டாக்கிங் எனப்படுகிறது. நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், இங்கிருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும். அங்கு இருப்பவர்களை இங்கு அழைத்து வர முடியும். இந்நிலையில், இன்று இரவு 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி60 ராக்கெட், திட்டமிட்டபடி செயல்பாடுகளை மேற்கொண்டது. ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தன. இதையடுத்து, பூமியில் இருந்து 470 கி.மீ உயரத்தில் புவி வட்டப் பாதையில் 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 2 ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். PSLV C60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, பி செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் இந்த 2 செயற்கைக்கோள்களையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த செயற்கைக்கோள்களும் பயணிக்கும் வேகத்தை இங்கிருந்தபடியே மாற்றி 2 செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இணைப்பார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post