டிராகனுக்கு பயம் காட்டும் 'புலி'! விண்வெளி விஷயத்தில் இந்தியாவின் சாதனையால் வாயடைத்த சீனா

post-img
சென்னை: விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ஸ்பேஸ் ரேஸ்: விண்வெளி என்பது மிகப்பெரிய கடல். அதில் ஏராளமான விஷயங்களை செய்ய முடியும். ஆனால் யார் முந்துகிறார்கள் என்பதுதான் விஷயம். தொடக்கத்தில் சொவியத் ரஷ்யா முன்னணியில் இருந்தது. இப்போது அமெரிக்கா இருக்கிறது. ஆனாலும் அமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சீனா விண்வெளி ஆய்வுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த போட்டி சூழலில்தான், ரேசில் இந்தியா உள்ளே நுழைந்திருக்கிறது. இந்தியாவின் என்ட்ரி வேறு எந்த நாடுகளைவிடவும் சீனாவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய வளர்ச்சி: விண்வெளி துறையில் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்த முடியும். இந்த பாயிண்டை பிடித்துக்கொண்ட சீனா மளமளவென வளர்ந்து வந்தது. ஆசியாவில் தனக்கு போட்டியாளர் என்று வேறு யாரும் இருக்கக்கூடாது என் கூட யோசித்திருந்தது. ஆனால், இங்குதான் இந்தியா தனது தனித்தன்மையை ஆணித்தரமாக அடித்து நிரூபித்து வைத்திருந்தது. அதாவது, சீனா, அமெரிக்காவை போல எங்களால் பல ஆயிரம் கோடி ரூபாயை விண்வெளி ஆய்வுக்கு செலவிட முடியாது. ஆனால், குறைந்த செலவில் வேலையை கச்சிதமாக முடித்துக்காட்டுவோம் என இஸ்ரோ பல மிஷன்களை வெறும் சில நூறு கோடி ரூபாயில் செய்து காட்டியது. சீனாவுக்கு சவால்: இந்த செயல்பாடுகள் சீனா உட்பட மொத்த உலகத்தையும் வாயடைக்க வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-60 ரக ராக்கெட் இந்திய விண்வெளி துறையின் மைல் கல் என்று பாராட்டப்படுகிறது. அதாவது பூமியிலிருந்து விண்வெளிக்கு பெரிய பொருளை அனுப்ப முடியாது. உதாரணத்திற்கு சர்வதேச விண்வெளி மையத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் சைஸ் ஒரு பெரிய கால்பந்து மைதானத்திற்கு சமமாக இருக்கிறது. அதை எப்படி பூமியிலிருந்து அனுப்பியிருக்க முடியும்? வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவ்வளவு பெரிய ராக்கெட் எந்த நாட்டிடமும் கிடையாது. அப்படியெனில் இது எப்படி சாத்தியமானது? என்றால், சின்ன சின்ன பொருட்களாக அனுப்பி அதை விண்வெளியில் ஒன்றிணைத்து இவ்வளவு பெரிய விண்வெளி மையத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது சாதாரண வேலை கிடையாது. விண்வெளியில் ஒவ்வொரு பொருளும் மணிக்கு சில நூறு கி.மீ வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். இதனை ஒன்றுடன் ஒன்று இணைப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலை. சின்ன மிஸ்டேக் நடந்தாலும் மொத்த பிளானும் சொதப்பிவிடும். இதையெல்லம் கவனத்தில்கொண்டுதான் விஞ்ஞானிகள் துல்லியமாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த பணியை மேலே சொன்னதை போல அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் செய்து வந்தன. தற்போது முதல் முறையாக இந்தியா வெற்றிகரமாக செய்திருக்கிறது. இந்தியா: சேசர், டார்கெட் என இரண்டு விண்கலன்கள் விண்வெளிக்கு நேற்று முன்தினம் இஸ்ரோ அனுப்பி வைத்தது. இதன் வேலை டாக், அன்டாக் (Dock-UnDock) தான்! இவையில் பூமியிலிருந்து சுமார் 450 கி.மீ உயரத்தில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். அப்படி செய்யும்போது இரண்டு கருவிகளும் இணைந்து வேலை செய்யும். பின்னர் இரண்டும் தனித்தனியாக பிரியும். அப்போது இரண்டும் தனித்தனியாக வேலை செய்யும். இதை இந்தியா சாதித்து காட்டியிருக்கிறது. எனவே இதன் மூலம், மற்ற நாடுகளின் விண்வெளி மிஷன்களை இந்தியா கையில் எடுத்து செய்து கொடுக்கும். அதுவும் குறைந்த விலையில். இதன் மூலம் நாட்டின் வருமானம் அதிகரிக்கும். சீனாவின் பொழப்பில் மண்ணை அள்ளி கொட்டும் கதைதான் இது. எனவே சீனா இந்த விஷயத்தில் இந்தியா மீது ஒரு கண் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post