என்ன ஆனாலும் விட மாட்டேன்! புத்தாண்டு நாளில்.. சபதம் எடுத்த சீன அதிபர் ஜின்பிங்! அதிரும் உலக நாடுகள்

post-img
பெய்ஜிங்: என்ன நடந்தாலும் தைவானை சீனாவுடன் இணைத்தே தீருவோம்.. தைவானை சீனாவின் அங்கம் ஆக்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார். சீனாவிற்கு அருகே தென் சீன கடல் பகுதியில் இருக்கும் தைவானை சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்த தைவான் என்பது வரலாற்று ரீதியாக சீனாவுடன் தொடர்பு கொண்டது. சீனாவில் இருந்த பல்வேறு இனக்குழுக்கள் தைவானில் குடியேறி வாழ்ந்து வந்தன. வரலாற்று முறைப்படி தற்போது தைவானில் இருப்பது சீன முன்னோர்கள்தான். அங்கு இருக்கும் மக்கள் ஆஸ்ட்ரோனிஷியன் பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் சீனாவில் இருந்து தைவானில் குடியேறியவர்கள். இப்படிப்பட்ட தைவான் AD239 ஆண்டு வரை சீனாவின் கட்டுப்பாட்டிலும், பின்னர் டச்சு அரசு கட்டுப்பாட்டிலும். பின்னர் மீண்டும் 1683 to 1895 வரை சீனா கட்டுப்பாட்டிலும் வந்தது. பின்னர் தைவான் சீனா - ஜப்பான் போரின் முடிவில் ஜப்பான் கட்டுப்பாட்டிற்கு சென்றது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தைவான் மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டிற்கும் சென்றது. அப்போது தைவானை சீனா ஜப்பானிடம் இருந்து மீண்டும் கைப்பற்ற உதவியாக இருந்ததே அமெரிக்காதான் என்பது வேறு கதை. இதன் பின் சீனாவில் 1949ல் ஏற்பட்ட உள்நாட்டு போர் அனைத்தையும் மாற்றியது. சீனாவை நிர்வகித்து வந்த சியாங் கேசிங்கிற்கு எதிராக மாவோ சார்பாக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அது உள்நாட்டு போராக வெடித்தது. இந்த போரில் மாவோ வெற்றிபெற்று சீனாவில் ஆட்சிக்கு வந்தார். தோல்வி அடைந்த அதிபர் சியாங் கேசிங் தைவானுக்கு தப்பி ஓடி அங்கு தனி நிர்வாகம் நடத்தி வந்தார். இவர் தைவானில் இருந்து கொண்டு.. நாங்கள்தான் உண்மையான சீனா என்று கூறினார். சீனாவில் இருக்கும் அரசு பொய்யானது என்று கூறினார். முதலில் பல நாடுகள் தைவானில் இருக்கும் அரசை உண்மையான சீன அரசு என்று அங்கீகரித்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சீனாவை தனி நாடாக உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு, பெய்ஜிங் உடன் வர்த்தகம் தொடங்கின. இதையடுத்து தைவான் போக போக நாங்கள்தான் உண்மையான சீனா என்று சொல்வதை விடுத்து.. நாங்கள் தனி நாடு. நாங்கள் தைவான் என்று சொல்ல தொடங்கியது. இதுதான் தைவான் - சீனா மோதல் கதை. ஆனால் தைவான் ஐநா விதிப்படி இன்னும் தனி நாடு ஆகவில்லை. அமெரிக்காவும் இதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா தூதரக ரீதியாக தைவானுடன் உறவில் இல்லை. இதில் அமெரிக்கா இரண்டு விதமான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. வரலாற்று ரீதியாக தைவானை அமெரிக்கா தனி நாடாக வெளிப்படையாக அங்கீகரித்தது கிடையாது. சில தலைவர்கள் அவ்வப்போது தைவானுக்கு ஆதரவாக பேசினாலும்.. எப்போதும் ஒற்றை சீனா என்ற நிலைப்பாட்டில் மட்டுமே அமெரிக்கா இருந்துள்ளது. ஆனால் சீனாவை சீண்டுவதற்காக தைவானை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அதோடு சீனாவிடம் இருந்து பாதுகாக்க தைவானுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தைவானை முழுமையாக கைப்பற்ற சீனா தீவிரமாக முயன்று வருகிறது. தைவானுக்கு போர் விமானங்களை அனுப்புவது, தைவானை சுற்றி போர் கப்பல்களை நிறுத்துவது என்று சீனா பயமுறுத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் புத்தாண்டு நாளில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சபதம் ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி என்ன நடந்தாலும் தைவானை சீனாவுடன் இணைத்தே தீருவோம்.. தைவானை சீனாவின் அங்கம் ஆக்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார். தைவானுக்கும் சீனாவிற்கும் இருப்பது ரத்த பந்தம். அதை யாராலும் தடுக்க முடியாது. யாரும் எங்களை தடுப்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. இரண்டையும் ஒன்று சேர்ப்பதே என் நோக்கம். அதை நிறைவேற்றியே தீருவேன், என்று சபதம் செய்துள்ளார். தைவான் தனி நாடாக மாறினால் அது சீனாவிற்கு பாதுகாப்பு ரீதியாக சிக்கல். உக்ரைன் நேட்டோவில் சேர்வது ரஷ்யாவிற்கு எப்படி சிக்கலோ அப்படித்தான் தைவான் தனி நாடாக மாறினால் சீனாவிற்கும் சிக்கல். ஏற்கனவே கடந்த பல மாதங்களாக தைவான் வான் எல்லைக்குள் தொடர்ந்து சீன போர் விமானங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post