விரைவில் மூளும் ஆப்கான்-பாக். போர்! இந்தியாவுக்கு கிடைக்கும் மிக முக்கிய வாய்ப்பு இது

post-img
டெல்லி: ஆப்கானிஸ்தானுடன் இந்தியா தனது உறவை பலப்படுத்தி வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பாகிஸ்தான், ஒற்றுமையை சீர் குலைக்க களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் ஆப்கான்-பாக் இடையே போர் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. இதில் இந்தியாவுக்கும் கொஞ்சம் லாபம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க படைகள் வெளியேறின. இதனையடுத்து ஆட்சி அதிகாரம் தாலிபான்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போதுவரை, தாலிபான்கள் பிறப்பித்து வரும் உத்தவுகள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரானதாகவே இருக்கிறது. ஆனால் இந்தியா விஷயத்தில் தாலிபான்கள் பெரியதாக வால் ஆட்டவில்லை. ஏனெனில் அண்டை நாடுகளுடன் ஒற்றுமையாக போனால்தான், சர்வதேச அளவில் பல உதவிகளை ஆப்கானிஸ்தான் பெற முடியும். எனவே, இந்தியாவுக்கு எதிரான சதி செயலை மேற்கொள்ள தங்கள் நாட்டில் அனுமதி கொடுக்க மாட்டோம் என்று தாலிபான் அரசு உறுதி அளித்தது. தலிபான் பாதுகாப்பு அமைச்சர் முகமது யாகூப் முஜாஹித்தான் இந்த வாக்குறுதியை அளித்தார். இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியை சந்தித்த அவர், "தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மகன் முல்லா யாகூப், இந்தியாவுடன் நட்பு ரீதியான இராஜதந்திர உறவை மேம்படுத்த விரும்புகிறார்" என்று கூறியிருந்தார். இதற்கு கைமாறாக, மும்பையில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் இருந்து அந்நாட்டை சேர்ந்த தூதர் ஒருவர் பணிபுரிவதற்கு இந்தியா அனுமதியளித்தது. இதன் மூலம், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உள்ளிட்ட உறவுகள் வலுப்பெற உள்ளன. ஆனால் இது பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பாகிஸ்தான், இந்தியாவிடம் எல்லையை பகிர்ந்து கொண்டிருப்பதை போலவே, ஆப்கானிஸ்தானுடனும் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் நட்பாகிவிட்டு, பாகிஸ்தானை சுற்றி வளைத்துவிட்டால் என்ன செய்வது? என்று அச்சமடைந்த அந்நாட்டு ராணுவம் புதிய யுக்தியை கையில் எடுத்திருந்தது. அதாவது பாகிஸ்தான் தாலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் எனும் அமைப்பினர் தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அவர்களுக்கு பதலடி கொடுப்போம் என்றும் கூறியிருந்தது. இப்படியாக கருத்துக்கள் வெளியான ஓரிரு நாட்களில் அதாவது டிச.24ம் தேதி நள்ளிரவில் ஆப்கானிஸ்தானில் உள்ள பர்மால் மாவட்டத்தில் முர்க் பஜார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் வஜிரிஸ்தானி அகதிகள் சுமார் 45 பேர் கொல்லப்பட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது போர் விமானத்தை பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்நாடு இதுவரை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால் தாக்குதல் நடந்தது எப்படி? எந்த வகையான போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது? உள்ளிட்ட விஷயங்களை ஆப்கானிஸ்தான் உளவு அமைப்பு மோப்பம் பிடித்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது. இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது ரொம்ப சீக்கிரமாகவே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போர் ஏற்படும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதியுள்ளனர். அது நடந்தால் இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளில் சில மாற்றங்கள் நடக்கும். முதல் மாற்றம் பாகிஸ்தானிடமிருந்து எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு தூரம் இந்தியா விலகி விடும். இரண்டாவது, ஆப்கானிஸ்தானுடன் இந்தியா தனது நெருக்கத்தை அதிகரிக்கும். ஏனெனில் அந்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டுமானங்கள் தேவைப்படுகின்றன. இது இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இதை பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை இந்தியா போதுமான அளவுக்கு வளர்த்துக்கொள்ளும். இந்த உறவுகள், இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களை தாலிபான்கள் திட்டமிடாது என்பதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post