டெல்லி: இந்தியாவின் ஆயிரம் ரூபாய்க்கு 1.89 லட்சம் பணம் கொடுக்கும் நாடு ஒன்று இருப்பதாக யூடியூபர் ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ஆர்வத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்திய ரூபாய் மதிப்பு இவ்வளவு தொகை கொடுக்கும் நாடு எது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டின் பணத்தின் மதிப்புக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளது. ஒருநாட்டின் அன்னிய செலாவணி, தங்கம் கையிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணத்தின் மதிப்பு வேறுபடுகிறது. குறிப்பாக நமது இந்திய ரூபாயின் மதிப்புக்கு சமமான அமெரிக்க டாலரின் விலை 89 காசுகளாக உள்ளது. அதாவது நமது ஊர் மதிப்பில் 100 கொடுத்தால், அமெரிக்க டாலராக 8 தான் கிடைக்கும்.
இப்படி நாட்டிற்கு நாடு பண மதிப்பு மாறுபாடும். இந்தியாவை விட பண மதிப்பு குறைந்த நாடுகள் நிறைய இருக்கின்றன. அந்த வகையில்தான், இந்தியாவின் 1000 ரூபாயை கொடுத்தால் இந்தோனேசியா பண மதிப்புக்கு ரூ.1.89 லட்சத்தை கொடுக்கும் நாடு பற்றிய நெட்டிசன் ஒருவருடைய பதிவு இணையத்தில் வைரலாகிறது. ஏதும் மேஜிக் செய்து விட்டாரா என நினைக்கும் அளவுக்கு இவ்வளவு வித்தியாசம் எந்த நாட்டில் இருக்கிறது என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்..
ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள இயற்கை அழகுகள் புராதன சின்னங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்க கூடியதக உள்ளது. அதிலும் இந்தோனேசியாவின் பாலி மாகாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. பாலிக்கு புதுமண தம்பதிகள் தேனிலவை கோண்டாட வருகை தருவாது வழக்கம்.
இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இங்கு அதிக அளவில் வருகை தருவதை பார்க்கலாம். இந்தோனேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா சலுகையும் உள்ளது. அதேபோல பண மதிப்பும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது குறைவு என்பதால் இந்தியர்களுக்கு அதிகம் செலவு வைக்காத நாடுகளில் ஒன்றாக உள்ளது.
சமீபத்தில் இந்தோனேசியாவுக்கு சென்ற இந்திய சுற்றுலாப் பயணி காஷ் சவுத்ரி என்பவர் தனது அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், இந்தோனேசியாவில் தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை அந்த நாட்டு பணமாக மாற்றியிருக்கிறார். அந்த பணம் அந்த நாட்டில் 1.89 லட்சத்திற்கு சமம் ஆகும். இந்த பணத்தை கொண்டு என்னவெல்லாம் வாங்க முடியும் என்பதையும் தனது வீடியோவில் அவர் பகிர்ந்து இருந்தார்.
இதன்படி, பாலியின் ஒரு தண்ணீர் பாட்டிலின் விலையே 3,500-ஆம், காஃபியின் விலையை கேட்டால் தலையே சுற்றி விடும். 20 ஆயிரம் இந்தோனேசிய பணமாம். பண வீக்கம் உச்சத்தில் இருப்பதையும் அந்த நாட்டின் பொருளாதார நிலைமை காட்டும் விதமாகவும் இது அமைந்துள்ளது. காஷ் சவுத்ரி பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், " பாலியில் இந்திய ரூபாய்க்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறதா? என விய்ப்புடன் பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், பணம் கையில் கூடுதலாக இருப்பது போல தெரிந்தாலும் விலை அதற்கு மேல் இருப்பதால் பெரிதாக எந்த வேறுபாடும் இருக்காது என பதிவிட்டு இருக்கிறார். காஷ் சவுத்ரி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.