வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பறவை எது என்பதில் கடந்த 250 ஆண்டுகளாக குழப்பம் நீடித்து வந்த நிலையில் ஆட்சியை விட்டு செல்லும் ஜோ பைடன் முக்கிய ஒப்புதலை வழங்கி உள்ளார். அதன்படி அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கொண்ட கழுகு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக தேசியக்கொடி, தேசிய மரம், தேசிய பறவை உள்ளிட்டவை உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் தேசிய பறவையாக மயில் உள்ளது. ஆனால் உலகின் வல்லரசு நாடுகளில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் தேசிய பறவை எது என்பதில் நீண்டகாலமாக குழப்பம் நீடித்து வருகிறது.
அதாவது அமெரிக்காவில் அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்படும் முத்திரைகளின் ஒருபகுதியாக வெண்தலை கழுகின் சின்னம் என்பது இடம்பெற்றுள்ளது. இந்த முத்திரை தான் அமெரிக்காவின் அனைத்து ஆவணங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1782 ம் ஆண்டு முதல் இந்த முத்திரை என்பது நடைமுறையில் உள்ளது.
இதனால் அமெரிக்காவின் தேசிய பறவை என்பது வெண்தலை கொண்ட கழுகு என்று ஒருதரப்பினர் கூறிவந்தனர். அதேவேளையில் அமெரிக்காவுக்கு என்று தனியாக தேசிய பறவை இல்லை என்று இன்னொரு தரப்பினர் கூறி வந்தனர். ஏனெ்னறால் அமெரிக்கா அரசு சார்பில் தேசிய பறவை என்பது அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே தான் அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகை அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அதிபர் ஜோ பைடன் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு தற்போது ஜோ பைடன் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்மூலம் 240 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகு அதிகாரப்பூர்வமாகி உள்ளது.
தற்போது தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள வெண்தலை கழுகு என்பது வடஅமெரிக்காவை பூர்வீமாக கொண்டது. குறிப்பாக மினசோட்டா மகாணம் தான் இந்த வெண்தலை கழுகின் தாயகமாக கஉள்ளது. இங்கு தான் அதிகளவில் வெண்தலை கழுத்து கழுகுகள் உள்ளன. இந்த கழுகின் உடல் என்பது பழுப்பு நிறத்தில் இருக்கும். அலகு மஞ்சள் நிறத்திலும், தலை மற்றும் கழுத்து பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
இதுபற்றி தேசிய கழுகு மையத்தின் இணை தலைவர் ஜேக் டேவிஸ் கூறுகையில், ‛‛அமெரிக்காவின் தேசிய பறவையாக சுமார் 250 ஆண்டுகளாக வெண்தலை கழுகு அழைக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பறவை முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள வெண்தலை கழுகை இனி அமெரிக்காவில் வேட்டையாட, விற்பனை செய்ய ஏற்கனவே தடை உள்ளது. வேகமாக அழிந்து வந்த இந்த கழுகை தேசிய முத்திரை சட்டம் 1940 ன் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 2009 ம் ஆண்டு முதல் அந்த கழுகு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அதன் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக வெண்தலை கழுகை அந்த நாட்டின் தேசிய பறவையாக அறிவித்துள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.