New Year Wishes 2025: புத்தாண்டு வாழ்த்துகள்! உறவினர்களிடம் பகிர.. அசத்தலான நியூ இயர் வாழ்த்துகள்

post-img
சென்னை: 2025 புத்தாண்டை முன்னிட்டு, உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் பகிர வேண்டிய புத்தாண்டு தின வாழ்த்து செய்திகள் மற்றும் கவிதைகளை இந்த பக்கத்தில் காணலாம். அசத்தலான New Year Wishes இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. புத்தாண்டு என்பது ஒரு புதிய காலண்டர் ஆண்டு தொடங்கும் நாள் ஆகும். உலகம் முழுக்க கலாச்சாரங்கள் வேறுபட்டு இருந்தாலும்.. ஆங்கில புத்தாண்டை பல கலாச்சாரங்கள் ஏதோ ஒரு வகையில் கொண்டாடுகின்றன. இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் நாட்காட்டியின் காலண்டர் அமைப்பில் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. ஜூலியன் நாட்காட்டி மற்றும் ரோமன் நாட்காட்டியில் ஆண்டின் முதல் நாளாகவும் ஜனவரி 1ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட புத்தாண்டில் நீங்கள் நண்பர்களிடம் பகிர.. அசத்தலான 2025 New Year Wishes in Tamil இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. 2025ம் வரும் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள், புதிய கனவுகள் மற்றும் புதிய சாதனைகளை கொண்டு வரட்டும். 2024ம் ஆண்டு உங்களுடன் அன்பாக.. நட்பாக.. சிரிப்பாக சென்றது.. 2025ஐ ஒன்றாக வரவேற்போம் நண்பா! - புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2024 நாம்தான்.. 2025ம் வருஷமும் நாம்தான்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025ல்.. அப்படியே சிறகடிப்போம் நாங்க.. நியூ இயர் விஷஸ் மக்களே! 2024 முடிஞ்சிடிச்சுன்னு "Peelings" பண்ணது போதும் பாஸ்.. 2025ஐ கொண்டாடுவோம்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்! அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி.. 2025 புத்தாண்டில் நமது நட்பும் அன்பும் இன்னும் நெருக்கமடைய வாழ்த்துகள் 2025 புத்தாண்டுன்னா ஃபயர் இல்லா பாஸ்.. வைல்டு ஃபயர்.. வாங்க ஜாலியா கொண்டாடுவோம்! புத்தாண்டில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கவும், உங்கள் வாழ்க்கை மாற்றம் அடைய வாழ்த்துகள்! புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆங்கில புத்தாண்டு உலகம் முழுக்க பரவலாக கடைபிடிக்கும் புத்தாண்டு ஆகும். ஆனாலும் பிற கலாச்சாரங்கள் தங்கள் பாரம்பரிய அல்லது மத புத்தாண்டு தினத்தை தங்கள் சொந்த பழக்கவழக்கங்களின்படி கொண்டாடுகின்றன. சீனப் புத்தாண்டு, இஸ்லாமியப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு (புத்தாண்டு) மற்றும் யூதப் புத்தாண்டு ஆகியவை நன்கு அறியப்பட்ட உதாரணங்களாகும். இந்தியா, நேபாளம் மற்றும் பிற நாடுகளும் கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் புத்தாண்டை கொண்டாடுகின்றன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post