சீரியல் நடிகை விஜே சித்ராவின் தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்ட சோகம்

post-img
சென்னை: சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 64. தனது மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு இறந்து கிடந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த நிலையில் திடீரென திருவான்மியூர் வீட்டில் தனது மகளின் துப்பட்டாவால் அவருடைய தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post