போலீஸ்காரரின் மனைவியிடமே வேலையை காட்டிய நபர்.. ஆக்ஷனில் இறங்கிய காவல் துறை

post-img
விருதுநகர்: விருதுநகர் அருகே காவல் துறை ஆய்வாளரின் மனைவியிடம் செயின் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இருசக்கர வாகனத்தில் வந்து நகைப் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதில், சில சமயங்களில் உயிரிழப்புச் சம்பவங்களும் அரங்கேறி விடுவதால், பெண்கள் கவரிங் நகைகளை அணிந்துகூட வெளியில் செல்ல அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகரின் காவல் துறஐ ஆய்வாளரின் மனைவியிடமே செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் உள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கார்மெண்ட்ஸில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுரேஷ். இவரது மனைவி முத்துமாரி கார்மென்ட்ஸில் (வயது 45) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் காலை 11 மணியளவில் அவர் பணியாற்றி வரும் கார்மெண்ட்ஸ் கடையை திறந்து வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி கடைக்குள் புகுந்த மர்ம நபர் தனியாக பணியாற்றி வந்த முத்துமாரி அணிந்திருந்த தங்கச் செயினை பறித்து தப்பிவிட முயற்சித்துள்ளார். ஹெல்மெட் அணிந்த நபர் தனது தங்க செயினை பறிக்க முயற்சிப்பதை அறிந்த முத்துமாரி மர்ம நபருடன் போராடிய நிலையில் கைப்பிடி அளவு செயின் மட்டும் ஹெல்மெட் அணிந்த நபர் கைவசம் சென்று விடவே உடனடியாக சுதாரித்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து முத்துமாரி கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதையடுத்து, அந்த மர்ம நபர் கையில் கிடைத்த செயனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார். முத்துமாரியின் கூச்சல் சப்தத்தைத்க் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது செயின் பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ஆட்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய பகுதியில் காவல் துறை சார்பு ஆய்வாளர் மனைவியிடமே ஹெல்மெட் அணிந்தவாரு மர்ம நபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதி பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post