ஆபாச நடிகை வழக்கில் தண்டனை! பெரிய சிக்கலில் மாட்டிய டிரம்ப்.. இனி அதிபராக பதவியேற்க முடியுமா?

post-img
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப், இன்னும் சில நாட்களில் அதிபராக பதவியேற்கிறார். இந்தச் சூழலில் ஆபாச நடிகைக்கு முறைகேடாகப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்பின் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது. அதில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிவிட்ட நிலையில், அவரது தண்டனை விவரங்கள் ஜன.10ம் தேதி வெளியாக இருக்கிறது. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் வென்றவர் டிரம்ப். இவர் இன்னும் 15 நாட்களில் அதாவது ஜன. 20ம் தேதி அதிபராகப் பதவியேற்க இருக்கிறார். இப்படிப் பதவியேற்புக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், குற்ற வழக்கு ஒன்றில் அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம். டிரம்ப் இதற்கு முன்பும் 2014 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45ஆவது அதிபராக இருந்தவர்.. அவர் அப்போதே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். அப்படி அவர் சிக்கிய சர்ச்சைகளில் ஒன்றுதான் ஆபாச நடிகை பணம் கொடுத்த விவகாரம். அதாவது டிரம்பிற்கும் மெலனியாவுக்கும் இடையே கடந்த 2005ம் ஆண்டிலேயே திருணம் நடந்திருந்தாலும் கூட அவர் அதன் பிறகும் பல பெண்களுடன் உறவில் இருந்ததாக்கச் சொல்லப்படுகிறது.. அப்படி மெலனியா கர்ப்பமாக இருந்த போது ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருடன் டிரம்ப் உடன் நெருக்கமாக இருந்துள்ளார். இது டிரம்ப் முதலில் போட்டியிட்ட 2016 அதிபர் தேர்தல் பெரிதாக வெடிக்கும் எனச் சொல்லப்பட்டது. இதனால் டிரம்ப் உடனான உறவு குறித்து எங்கும் பேசக் கூடாது என்று ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ஒப்பந்தம் போட்டார். டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மூலம் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு இதற்காக $130,000 தரப்பட்டுள்ளது. அந்நாட்டு சட்டப்படி இப்படி ஒப்பந்தம் போட்டு பணம் கொடுப்பது சட்டவிரோதமானது இல்லை.. ஆனால், இதற்குத் தந்த நிதியைத் தேர்தல் செலவுகள் என்று டிரம்ப் கணக்குக் காட்டியதே சர்ச்சையாக வெடித்தது.. வழக்கு தீவிரமான நிலையில், அவரது வழக்கறிஞர் டிரம்பிற்கு எதிராகவே சாட்சியம் அளித்தார். நியூயார்க் மாகாண நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்த நிலையில், டிரம்ப் மீதான 34 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இருப்பினும், தண்டனை விவரங்கள் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் வரும் ஜன.10ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது. அவர் ஜன.20ம் தேதி இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகும் சூழலில் அதற்கு 10 நாட்களுக்கு முன்பு அவரது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் போது டிரம்ப் ஆஜாராக உத்தரவிட்டு இருக்கிறார். இந்த வழக்கில் டிரம்பிற்கு நான்கு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம். ஆனால், பெரும்பாலும் தண்டனை விதிக்கப்படாமல் இருக்கவே வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது அவர் குற்றவாளி என்பது அவரது ரெக்கார்ட்டில் பதிவாகும். ஆனால், சிறைச்சாலை, அபராதம் என எந்தவொரு தண்டனையும் விதிக்கப்படாமல் இருக்க வாய்ப்பு அதிகம். தண்டனை எதுவும் இல்லை என்றால் டிரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு குறைவு. அதேநேரம் மேல்முறையீடு செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது இந்த தண்டனை விவரங்களை டிரம்ப் அதிபராகப் பதவியேற்பதை எந்த விதத்திலும் தடுக்காது. அந்நாட்டு சட்டப்படி அப்படி எதுவும் இல்லை. அதேநேரம் டிரம்பிற்கு சிறைத் தண்டனைக்கான வாய்ப்பு குறைவு என்பதால் எந்தவொரு சிக்கலாம் வராது என்றே கூறப்படுகிறது. Presidential immunityயும் கூட டிரம்பை இதில் காப்பாற்றும்.! Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post