நெல்லையில் பெண்ணை தாக்கி.. டிரஸ்ஸை கிழித்து இழுத்து சென்ற திருநங்கைகள்.. திருநெல்வேலி சிறுமி காதல்?

post-img
நெல்லை: பெண் ஒருவரை திருநங்கைகள் கூட்டாக சேர்ந்து அடித்து இழுத்துச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை களக்காட்டில் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு பெருமாள் கோயில் அருகில் உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்.. திருமணமான இந்த பெண் கணவனையும், தன்னுடைய 2 மகன்களையும் பிரிந்துவிட்டார்.. தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வருகிறார் இந்நிலையில், கேரளாவில் பணிபுரியும் தன்னுடைய மகன் புவனேஸ்வரனை, அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதைக் கேள்விப்பட்ட உமா, அந்த சிறுமியை தனியாக அழைத்து கண்டித்திருக்கிறார். அத்துடன் சிறுமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. திருநங்கைகள்: இதனால் கோபமடைந்த அந்த சிறுமி, உமா தன்னை கடுமையாக தாக்கியது குறித்து, திருநங்கையான தனது அண்ணன் இசக்கி பாண்டியிடம் தெரிவித்துள்ளார்.. இதைக்கேட்டு ஆத்திரமடைந்த இசக்கி பாண்டி, குலசேகரப்பட்டினத்தில் இருந்து சக கூட்டாளிகளான திருநங்கைகளுக்கு தகவல் சொல்லி ஊருக்கு அழைத்திருக்கிறார். இசக்கி பாண்டியின் அழைப்பை ஏற்று, 3 திருநங்கைகள் வந்துள்ளார்கள்.. அவர்களிடம் விஷயத்தை சொன்ன இசக்கி உமாவை தாக்குவதென முடிவு செய்தார்.. அதன்படியே திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து, உமாவிடம் தகராறு செய்துள்ளனர்... அப்போதும் ஆத்திரம் அடங்காமல், கம்பால் சரமாரியாக அடித்து தாக்கியதோடு, அவரது உடைகளையும் கிழித்து, தரதரவென நடுரோட்டிலேயே இழுத்து சென்றுள்ளனர்.. அதிர்ச்சி வீடியோ: பொதுவெளியிலேயே இப்படி நடப்பதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ந்துபோனார்கள்.. சிலர் இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ இணையவாசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது. இதனிடையே திருநங்கைகளால் பாதிக்கப்பட்ட உமா, களக்காடு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இசக்கி பாண்டி உள்ளிட்ட 4 திருநங்கைகளை தேடி வருகிறார்கள். மாறி மாறி புகார்: இதனிடையே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உமா, போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், கட்டாயப்படுத்தி தன்னிடம் சமாதானமாக போகுமாறு கையெழுத்து வாங்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாடு தெரிவித்துள்ளார். இதனிடையே கக்கன் நகரை சேர்ந்த உமா, தன்னை தாக்கிவிட்டதாக சிறுமியும் போலீசில் புகார் தந்துள்ளதையடுத்து, இந்த புகாரின் மீதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post