வாலாட்டும் சீனாவுக்கு செக்.. உள்ளே நுழையும் இந்தோனேசியா! இந்தியாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு!

post-img
ஜகர்த்தா: பிரிக்ஸ் அமைப்பில் இந்தோனேசியா உள்ளே நுழைந்திருக்கிறது. இந்த இணைவு, தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் அடாவடி தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக பிரிக்ஸ் நாடுகளின் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டணியில் இந்தோனேசியா புதியதாக இணைந்திருக்கிறது. இந்தியாவுக்கு என்ன லாபம்?: தென்கிழக்கு ஆசியாவை பொறுத்தவரை இந்தோனேசியாதான் கில்லி. இங்கிருந்து நிலக்கரி, தாவர எண்ணெய்கள், இரும்பு, தாதுக்கள், அலுமினியம், செம்பு மற்றும் அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது. மேற்குறிப்பிட்ட பொருட்களின் தேவைகள் இந்தியாவுக்கு நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இப்படி இருக்கையில் பிரிக்ஸ் அமைப்பில் இந்தோனேசியா இணைந்திருப்பது, இந்த வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க உதவும். மட்டுமல்லாது தடையில்லாமலும் நடைபெறும். எனவே இந்த பொருட்கள் குறித்து இனி இந்தியா பெரிய அளவில் கவலைப்பட தேவையில்லை. சீனாவுக்கு செக்: இந்தோனேசியா பிரிக்ஸில் இணைவது சீனாவுக்கு தலைவலிதான். காரணம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள கடல் பகுதியை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக முயன்று வருகிறது. அதாவது தைவானுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள தென் சீனக்கடல் மற்றும் தைவானுக்கு அடுத்து உள்ள பிலிப்பைன்ஸ் கடல் வரை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த கடல் பகுதியில் இந்தோனேசியா இருப்பது சீனாவுக்கு உறுத்தலாக இருந்து வந்தது. ஆனால் இப்போது இந்தோனேசியா பிரிக்ஸ் அமைப்புக்குள் வந்துவிட்டதால், அந்த நாட்டை கட்டுப்படுத்த முடியாது. எனவே சீனாவுக்கு சமமான போட்டியாளராக இந்தோனேசியா வளர வாய்ப்பு இருக்கிறது. அதிலும் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்தால் இந்த வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கும். ஜி20 நாடுகளுடன் கூட்டணி: ஏற்கெனவே ஜி20 நாடுகளில் உள்ள சீனா, அதன் உறுப்பு நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறது. மறுபும் பிரிக்ஸ் அமைப்பிலும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. இப்படியாக இரண்டு தளங்களிலிருந்தும் தன்னை வலுப்படுத்திக்கொண்டு வருகிறது. அதேபோல இந்தியாவும், ஜி20 உறுப்பினராக ஆஸ்திரேலியாவுடன் கூட்டு சேர்ந்து இயங்கி வந்தது. ஆனால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு போக இடையில் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் வேண்டும். அது இந்தோனேசியாதான். இப்போது இந்த இந்தோனேசியாவும் பிரிக்ஸில் இணைந்துவிட்டதால், 'பிரிக்ஸ் + ஜி20' என்கிற ஃபார்முலாவை வைத்து சீனா போலவே இந்தியாவும் தன்னை வளர்த்துக்கொள்ளும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உலக வங்கி மற்றும் ஐநா சபை: உலக வங்கி மற்றும் ஐநா சபையில் இந்தியாவுக்கு ஒரு பலமான கூட்டாளி தேவையாக இருக்கிறது. அது இந்தோனேசியாவாக இனி இருக்கும். ஐநாவில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கொண்டுவரும் தீர்மானங்களை ஆதரிக்க நிச்சயம் இந்தோனேசியா முன்வரும் என்றும் சொல்லப்படுகிறது. அதே நேரம், உலக வங்கியிடமிருந்து வளர்ச்சிகான நிதி உதவியை பெற இந்தியாவும், இந்தோனேசியாவும் கூட்டு சேர்ந்தால் தேவயான நிதி கிடைக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆக இப்படியா இந்தியாவுக்கு இந்தோனேசியாவும், இந்தோனேசியாவுக்கு இந்தியாவும் நிச்சயம் பரஸ்பரம் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post