பழிதீர்த்த நடிகை கவுதமி? நீலாங்கரை வீட்டை இடித்து தரை மட்டம் ஆக்கியதாக அழகப்பன் தரப்பு குற்றச்சாட்டு

post-img
சென்னை: சென்னை நீலாங்கரையில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த எனது வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து அகற்றிவிட்டதாக கவுதமி மீது அழகப்பன் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். கவுதமிக்கும் (Actress Gouthami) அவரது மேலாளராக இருந்த அழகப்பன் என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை நிலவி வந்தது. இதில் அழகப்பன் மற்றும் அவரது மனைவி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த அழகப்பன், நீலாங்கரையில் நாங்கள் கட்டி வந்த வீட்டை காணவில்லை என்றும் இதற்கு கவுதமி தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் 80, 90 களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த கவுதமி, தற்போது அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இதற்கிடையே, கவுதமிக்கும் அவரது மேலாளராக இருந்த அழகப்பன் என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை நிலவி வருகிறது. அதாவது, தனக்கு சொந்தமான சொத்துக்களை பராமரிக்கவும், விற்பதற்காகவும் அழகப்பன் என்பவரை பவர் ஆப் அட்டார்னியாக நியமித்ததாகவும், அவர் தன்னிடம் மோசடி செய்துவிட்டதாகவும் கவுதமி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகார் தொடர்பாக அழகப்பன் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 6 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அழகப்பன் மற்றும் அவரது மனைவி ஜாமினில் வெளிவந்த நிலையில், அவர்கள் கட்டியிருந்த வீடு தரைமட்டமாக இடிக்கப்பட்டு இருப்பதாகவும் இதற்கு நடிகை கவுதமியே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு கவுதமிதான் காரணம் என்றும் அழகப்பன் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:- சென்னையை அடுத்த நீலாங்கரையில் நடிகை கவுதமிக்கும், அழகப்பனுக்கும் சொந்தமான இடம் உள்ளதாம். இருவரும் அடுத்தடுத்து வீட்டு மனை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அழகப்பன் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணிகளை செய்து வந்தாராம். கவுதமி தனக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் போட்டு வேலி போட்டு வைத்துள்ளார். அழகப்பன் தனது இடத்தில் தரை தளத்துடன் சேர்த்து இரண்டு தளங்கள் கொண்ட வீட்டை கட்டி வந்துள்ளார். நிலைக்கதவு போடும் பணி வரை முடிந்த நிலையில், கவுதமி தொடர்ந்த நில மோசடி வழக்கில் அழகப்பன் மற்றும் அவரது மனைவி சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த அழகப்பன், தான் பாதியளவு கட்டியிருந்த வீட்டை பார்க்க வந்த போது அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்து இருக்கிறது. அதாவது, அழகப்பன் கட்டியிருந்த வீடு இருந்த இடம் கூட தெரியாமல் தரை மட்டம் ஆக்கப்பட்டுள்ளது. தங்கள் வீட்டை கவுதமி தான் இடித்து தள்ளியதாக அக்கம்பக்கத்தினர் கூறியதாக அழகப்பன் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மாநகராட்சி தரப்பில் இடிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதி ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டோம். அதில் மாநகராட்சி இடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றும் அழகப்பன் குடும்பத்தினர் கூறினர். கவுதமி தரப்பினர் தங்கள் இடத்தில் அருகில் இருந்த சிசிடிவி கேமராவையும் அகற்றிவிட்டதாகவும், இரண்டு பேர் நிலத்திற்கும் பொது வழி இருந்த நிலையில் அந்த பொது வழியையும் தற்போது கவுதமி தரப்பினர் பூட்டி வைத்து இருப்பதாகவும் அழப்பன் மனைவி நாச்சம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். 2 கோடி செலவு செய்து நாங்கள் கட்டிய வீடு இடிக்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் நாச்சம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கவுதமி தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post