படத்துக்கு அடி..உருவபொம்மை எரிப்பு! ஆளுநருக்கு இதுவா மரியாதை? குடியரசு தலைவர் ஆட்சி.. மிரட்டும் பாஜக

post-img
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக போராட்டத்தில் ஈடுபட்டது. ஆளுநர் உருவப் படத்தை அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆளுநருக்கு உரிய மரியாதை தராவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த நேரிடும் என பாஜக எச்சரித்துள்ளது. தமிழக சட்டசபையின் 2025ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டின் சட்டசபை பாரம்பரியத்தின் அடிப்படையில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். ஆண்டின் முதல் கூட்டத் தொடரிலேயே ஆளுநர் சபையை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்என் ரவி: இதனையடுத்து ஆளுநருக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநரை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை அந்த கட்சியின் அமைப்பு செயலாளரான ஆர்எஸ் பாரதி வெளியிட்டு இருந்தார். திமுக போராட்டம்: மேலும், சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுகவினர் கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தமிழக ஆளுநர் ரவி முழு உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்ப்பு ஏற்பட்டது. மதுரை மாநகர் மாவட்ட திமுகவினர் சார்பில் நூற்றுக்கணக்கான திமுக கட்சியினர் பஙகேற்ற கண்டன முழக்க ஆர்பாட்டம் நடந்தது. CM @mkstalin, ask your cadres to stop this nonsense behaviour. Remember,The Governor, under Article 356, can recommend President’s Rule if constitutional machinery breaks down. pic.twitter.com/GlOjVK1r3q உருவபொம்மை எரிப்பு: இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பதவி வேஸ்ட் என்றும், ஆளுனரை மத்திய அரசு திரும்ப பெறு என்றும், அதிமுக கட்சியின் பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்து தமிழகத்தை வஞ்சிக்கும் கயவர்கள் என கூறி கண்டன முழக்க கோஷம் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக ஆளுநர் ரவி உருவ பொம்மையை எரித்தனர். இதனால அந்த பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக கண்டனம்: மேலும் சில இடங்களில் ஆளுநரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதோடு ஆளுநரின் உருவப்படத்தை திமுகவினர் அடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என பாஜக மிரட்டி இருக்கிறது. இது தொடர்பாக கட்சி நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி ஆளுநரின் உருவப்படம் தாக்கப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளதோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேப் செய்து ஒரு போஸ்ட் போட்டு உள்ளார். குடியரசு தலைவர் ஆட்சி: அதில்," தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கள் கட்சி தொண்டர்களை இது போன்ற அநாகரீக செயல்கள் செய்வதை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். அரசியலமைப்பு எந்திரம் பழுதடைந்தால் 356 வது பிரிவின் கீழ் ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைக்க முடியும் என்பதை நினைவு கொள்ளுங்கள்" என கூறியுள்ளார். அதாவது ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைப்பார் என மிரட்டி இருக்கிறார் அமர் பிரசாத் ரெட்டி. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post