Gold Rate Today: 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ. 80 அதிகரித்த தங்கம் விலை!

post-img
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக தங்கம் விலை மாற்றமின்றி இருந்துவந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. தங்கம் இன்று கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.7,225க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 57,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை இந்தியாவில் நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், சற்று குறைவதுமாக இருந்து வருகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், முதல் நாளிலேயே தங்கம் விலை உயர்ந்தது. இரண்டாவது நாளிலும் தங்கம் விலை ஏற்றத்தைக் கண்டது. அதே நேரத்தில் தங்கத்தின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று திங்கட்கிழமை வரை 4 நாட்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் நேற்று ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரூ சவரன் ரூ.57,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 225 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 57 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,18 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5965 -க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 47,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை மாற்றம் ஏதும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 100,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஜனவரி 1 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,200 ஜனவரி 2 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,440 ஜனவரி 3 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,080 ஜனவரி 4 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720 ஜனவரி 5 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720 ஜனவரி 6 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720 ஜனவரி 7 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720 ஜனவரி 8 (இன்று) - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,800 Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post