மொத்த ராணுவத்தையும் அனுப்ப ரெடி.. 4 நாடுகளை உடனே அமெரிக்காவுடன் இணைங்க! முஷ்டி முறுக்கிய டிரம்ப்

post-img
நியூயார்க்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ராணுவ படைகளை களமிறக்கவும் தயார் என்று அவர் அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாகவே பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் உடனே இந்த பகுதிகளை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும். பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். இந்த பகுதிகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அதற்காக படைகளை கூட அனுப்புவேன். தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன். கனடாவை பொறுத்தவரை அப்படி இல்லை. அவர்களுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோ அமெரிக்காவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன். அவர்கள் அமெரிக்காவின் புதிய மாகாணங்களாக மாற வேண்டும். பணிகள் தொடங்கும்: பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளை நான் அதிபர் ஆனதும் அமெரிக்காவுடன் இணைக்க பணிகளை செய்வேன் என்று கூறி உள்ளார். இந்த பகுதிகள் பாதுகாப்பு ரீதியாக அமெரிக்காவிற்கும் மிகவும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம். திட்டம் கனடா திட்டம்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நேரம் பார்த்து கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டு உள்ளாராம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கனடாவில் அரசியல் சிக்கல் நிலவி வரும் நிலையில் டிரம்ப் மீண்டும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளாராம். பிரதமர் ட்ரூடோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடாவும் இணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறுவதை நான் உட்பட பலரும் விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம். இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும், மேலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து கனடா முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். கனடாவிற்கு ஒரு ஆபர் தருகிறேன்.. அவர்களின் டாலர் மதிப்பை அப்படியே அமெரிக்க டாலர் மதிப்பிற்கு மாற்றலாம். அதேபோல் அவர்களின் ஹெல்த்கேர் சிஸ்டம் அப்படியே தொடரலாம். இதனால் கனடாவிற்கு நஷ்டம் ஏற்படுவது தடுக்கப்படும். கனடா இந்த டீலிங்கை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அங்கே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி உள்ளார். உட்கட்சி பிரச்சனை, மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி விலகி உள்ளார். ஏற்கனவே நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கே நிதி நிர்வாகம் தொடங்கி கடன் பிரச்சனை வரை பல விஷயங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஜஸ்டின் ராஜினாமா செய்துள்ளார்.. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post