கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளைக் கொன்ற தாய்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

post-img
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில், கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயே தன்னுடைய 8 வயது மகளைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தாய் மற்றும் அவரின் காதலனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளார். நாடு முழுவதுமே பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. வீடு, பள்ளி உள்ளிட்ட எந்த இடத்திலும் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையே இருக்கிறது. பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்வது, கள்ளக்காதல் உறவுக்காக பெற்றோர் தங்கள் வாரிசுகளை கொல்வது போன்ற செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் காசிப்பூர் நகர் அருகே உள்ள பாவ்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிந்து. இவர் சக்ரா கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சிவாங்கி (8 வயது), ஆயுஷ் (3 வயது) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். பிந்துவுக்கு, பப்லு ராஜ்பர் என்ற பெயரில் ஒரு சகோதரர் உள்ளார். இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு மே 11 தேதி பிந்துவை, பப்லு ராஸ்ரா பகுதியிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார். பப்லு வீட்டுக்கு சென்ற பிந்து அங்கிருந்து தன் மாமியாரின் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கிளம்பியுள்ளார். ஆனால் பிந்து தன் மாமியார் வீட்டுக்கு செல்லவில்லை. மாறாக அவர் கதேவா என்கிற பகுதியில் தன்னுடைய கள்ளக்காதலன் லாலா ராஜ்பர் என்பவரைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்களின் கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையை கொல்வதற்காக திட்டமிட்டுள்ளனர். அதன்படி தன்னுடைய சகோதரரின் வீட்டில் இருந்து சென்று கள்ளக்காதலன் லாலா ராஜபருடன் இணைந்து பிந்து தன் மகள் சிவாங்கியை படுகொலை செய்துள்ளார். பிறகு சிவாங்கியின் உடலையும் அவர் அடக்கம் செய்துள்ளார். சிவாங்கியை காணவில்லை என்று மொத்த குடும்பத்தினரும் பதறினார்கள். இதையடுத்து பப்லு ராஜ்பர் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி ராஸ்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பல்லுவின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினார்கள். காவல்துறை விசாரணையில் சிவாங்கியை பிந்து தன் கள்ளக்காதலுக்காக கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. கொலையும் செய்துவிட்டு, மகளை காணவில்லை என்று நாடகமாடிய பிந்து பிறகு காவல்துறையிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதுகுறித்து பிந்து மற்றும் அவரின் கள்ளக்காதலன் ராஜ்பர் ஆகியோர் மீது கொலை செய்வது, ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காவல்துறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது. சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி பிந்து மற்றும் ராஜ்பர் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post