பதவிக்காக திமுக மீது 'அவசரநிலை' விமர்சனமா? கே பாலகிருஷ்ணன் பரபர! உற்று கவனித்த சிபிஎம் கட்சியினர்

post-img
சென்னை: சிபிஎம் கட்சியின் மாநில செயலராக 3வது முறையாகத் தேர்வாக வேண்டும் என்பதற்காகவே கே பாலகிருஷ்ணன் திமுக அரசை விமர்சித்துப் பேசியதாகச் சிலர் விமர்சித்த நிலையில், இது தொடர்பாக அவர் பதிலடி கொடுத்துள்ளார். சிபிஎம் கட்சி கொச்சைப்படுத்தும் வகையில் சிலர் கருத்துகளைப் பரப்பி வருவதாக காட்டமாகப் பதிலளித்துள்ளார். விழுப்புரத்தில் சமீபத்தில் சிபிஎம் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த மாநாட்டில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பேச்சு தமிழக அரசியல் பேசுபொருள் ஆனது. சர்ச்சையாக மாறிய பேச்சு: அதாவது அந்த கூட்டத்தில் பேசிய அவர், "தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று சொன்னாலே போலீஸ் வழக்குப் போடுகிறது. தமிழக முதல்வரை நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்.. இங்கே தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா? போலீசார் எப்படி இதுபோல கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தைக் கண்டு நீங்கப் பயக்க வேண்டிய அவசியம் என்ன? ஆர்ப்பாட்டம் அனுமதியை ரத்து செய்து, கைது செய்தால் அதை முடக்க முடியுமா? இது படத்தில் வருவதைப் போலச் சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போலவே இருக்கிறது. இந்த போக்கோ தமிழ்நாடு போலீசார் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் பேசியிருந்தார். கே பாலகிருஷ்ணன் விளக்கம்: இது பேசுபொருள் ஆன நிலையில், இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பதிலும் அளித்திருந்தது. இது ஒரு பக்கம் இருக்க கே பாலகிருஷ்ணன் மாநில செயலாளர் பதவியை 3வது முறையாகப் பெறவே இதுபோல விமர்சித்துப் பேசுவதாகவும் சிலர் குறிப்பிட்டனர். அதற்கு கே பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாட்டில் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொண்ட கே பாலகிருஷ்ணன் இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார். இது குறித்து மாநாட்டில் பேசிய அவர், "இந்த மாநாட்டுடன் நான் மாநில செயலாளர் பதவியில் இருந்து விடுபட்டு இருக்கிறேன். அது தொடர்பாக ஊடகங்களில் பல தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். பதவி ஆசையா: ஏதோ மூன்றாவது முறையாக மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்க நான் திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதாகச் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். பொதுக்கூட்டத்தில் பேசுவதை வைத்தா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநிலச் செயலாளரைத் தேர்வு செய்யும். எவ்வளவு தரக்குறைவாக கீழ்தரமாக நமது கட்சியை மதிப்பிட்டுள்ளனர். இது அவர்களின் அறிவின்மை, அறியாமையைத் தான் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை 72 வயதாக இன்னும் ஒரு மாதம் இருந்தாலும் கூட மீண்டும் மாநில பொறுப்புக்குத் தேர்வாகும் வாய்ப்பு இருந்தாலும் கூட வாய்ப்பு இருக்கும் வரை பொறுப்பில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இதனால் தான் வாய்ப்பு இருக்கும் போது கூட நான் விடுவித்துக் கொண்டேன். எனக்குப் பிறகு பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில பொதுச்செயலாளர் தேர்வு என்பது கட்சிக்குள் ஜனநாயக முறையில் நடக்கும் ஒன்று. அதையும் கட்சிக்காக பணியாற்றுவோரைக் கொச்சைப்படுத்தும் வகையில் தகவலைப் பரப்புவது அநாகரிகமானது. வாய்ப்பு இருக்கும் போதே விலகல்: நான் மத்திய குழு உறுப்பினராக இருக்கிறேன். மத்திய குழுவில் இருந்து கொண்டே மாநிலத்தில் பணியாற்ற முடியும். ஆனால், வாய்ப்பு இருக்கும் போதே அடுத்தவருக்கு வாய்ப்பு தர வேண்டும் எனது நிலைப்பாடு. இதனால் தான் இந்த மாற்றம் நடந்துள்ளது. ஏதோ நான் முயன்று அடைய முடியவில்லை என்று சித்தரிப்பது பொருத்தமில்லை" என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post