சென்னை - பெங்களூர் ஆறு வழிச் சாலைக்கு பிறந்தாச்சு விடிவுகாலம்.. ஜெட் வேகத்தில் தொடங்கிய பணி

post-img
காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூர் இடையேயான நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக ரூ. 654 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணி மந்த கதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பணிகளை உரிய காலத்தில் முடிக்காமல் இழுத்தடித்து வந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், விடுபட்ட பணிகளை முடிக்கும் வகையில் மறு ஏலம் கோரிய ஆணையம் புதிய காண்டிராக்டரை தேர்வு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் பெங்களூர் இரண்டும் மெட்ரோ சிட்டிக்களாகும். தொழில், வியாபாரம், கல்வி, ஐடி துறை என பல்வேறு தேவைகளுக்காக சென்னை மற்றும் பெங்களூரில் ஏராளமான மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, பாலுசெட்டிசத்திரம் உள்ளிட்ட பிரதான சந்திப்புகள் உள்ளன. இப்பகுதிகளின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் இந்த வாகனங்களால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவது பிரதான பிரச்னையாக இருந்து வந்தது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் சென்னை - பெங்களூரு தேசிய நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆறு வழிச் சாலை அமைக்கத் திட்டமிட்டது. இப்பணிகளுக்காக 654 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று பிரிவுகளில் ஒப்பந்தம் விடப்பட்டது. அதன்படி, மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் வரையிலான 23 கி.மீ. துாரம் சாலையை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பணிகளை முடிக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதுார் - காரப்பேட்டை வரையிலான 34 கிலோ மீட்டர் தொலைவு சாலையை 2024 டிசம்பரில் முடித்திருக்க வேண்டும். காரப்பேட்டை - வாலாஜாபேட்டை வரையில் உள்ள 36 கிலோ மீட்டர் தொலைவிலான சாலையை 2024 அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு தொடங்கிய மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. முக்கியமாக, ஸ்ரீபெரும்புதுார் - ஒரகடம் கூட்டுச் சாலையில், மேம்பால கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. பல்வேறு பகுதிகளில் சாலைப் பணிகளை முடிப்பதில் சிக்கல் உள்ளது. அந்த வகையில், சின்னையன்சத்திரம், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட இடங்களில் சாலைப் பணிகளை முடிப்பதில் பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்குச் செல்லும் பொதுமக்கள் ஏனாத்தூர், ராஜகுளம், சின்னையன்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பழைய டெண்டரை கைவிட்டு ஒப்பந்தத்தை தேசியி நெடுஞ்சாலைத் துறை ரத்து செய்துள்ளது. பணிகளை விரைவுபடுத்தி முடிக்கும் வகையில் புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி கூறியதாவது: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வந்த ஆறுவழிச் சாலைக்கான பணிகள் 57 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 17 கிலோ மீட்டர் சாலை பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது. பணிகள் இழுத்தடிக்கப்பட்டே வருவதால் விரைவில் நிறைவு செய்யும் வகையில் மறு டெண்டர் விடப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்ததாரர் ஜனவரி மாத இறுதிக்கு பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post