ஆப்கன் மோதலில் பின்தங்குவது ஏன்? பாகிஸ்தான் ராணுவ வீரர் - அதிகாரிகளின் சம்பளம் என்ன? குறைவா இருக்கே

post-img
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் கடும் மோதல் நடந்து வருகிறது. இதில் தாலிபான்களின் கை ஓங்கி உள்ள நிலையில் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நம் நாட்டின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பினர் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருநாடுகள் இடையேயான எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானின் டிடிபி அமைப்பினர் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதில் தாலிபான்களிடம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சரணடைவதாகவும், இதன்மூலம் சில ராணுவ நிலைகளை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மோதல் நிலவி வருவதால் இருநாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்றால் அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் திறமையாக செயல்பட வேண்டும். பாகிஸ்தானை பொறுத்தவரை ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு சீனா தான் அதிகம் உதவி செய்து வருகிறது. தாலிபான்களுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சீனா உதவும் பட்சத்தில் அது அந்த நாட்டுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும். ஆனால் தற்போது வரை இந்த மோதல் தொடர்பாக சீனா வாய் எதையும் திறக்கவில்லை. மேலும் பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி சூழல் உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி நிலை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளது. இதனால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பயிற்சி குறைபாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பயிற்சி குறைபாடு தான் தாலிபான்களை எதிர்க்கும் மோதலில் பாகிஸ்தான் ராணுவம் பின்தங்கி இருக்க முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் ஆசியாவில் உள்ள நாடுகளின் பலம்வாய்ந்த ராணுவத்தில் பாகிஸ்தானும் ஒன்று என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதாவது ஆசியாவில் சீனா, இந்தியாவுக்கு அடுத்தப்படியாக பலம்வாய்ந்த ராணுவ கட்டமைப்பு என்பது பாகிஸ்தானிடம் தான் உள்ளது. இதனால் நிச்சயம் ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தான் ராணுவம் சோடை போக வாய்ப்பில்லை. எப்படியாவது போராடி தனது நாட்டை தற்காத்து கொள்ளும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகள் வாங்கும் சம்பளம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பாகிஸ்தான் ராணுவத்தில் ஜுனியர் கமிஷன்ட் ஆபிசர் அதிகாரிகளுக்கு மாதம் பாகிஸ்தான் கரன்சியின்படி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பிரிவில் உள்ள அனுபவம், அவர்கள் வகிக்கும் பதவி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது மாறுபடுகிறது. அதேபோல் பாகிஸ்தான் கரன்சியின்படி Non Commissioner officers பிரிவில் வருரம் லான்ச் நாயக் மற்றம் நாயக் உள்ளிட்டோருக்கு மாதம் 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் என்பது வழங்கப்படுகிறது. கேப்டன்களுக்கு மாதம் 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மேஜர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு 60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. கேப்டன், மேஜர்களுக்கு வீட்டு வாடகை, போக்குவரத்து அலோவன்ஸ் உள்ளிட்ட பிற சலுகைகளும் உள்ளன. அதேபோல் Colonels மற்றும் Brigadiers அதிகாரிகளுக்கு அந்த நாட்டின் கரன்சியின்படி மாதம் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரையும், வீடு, போக்குவரத்துக்கான அலோவன்ஸ் மற்றும் குடும்பத்துக்கான மருத்துவ உதவிகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை ராணுவத்தில் உயர் பதவி என்றால் ஜெனரல் பொறுப்பு தான். இந்த பதவியில் இருப்போரின் சம்பளம் என்பது 2 லட்சத்தில் இருந்து தொடங்கும். இவர்களுக்கு சொகுசு பங்களா, பிரிமியம் ஹெல்த்கேர் வசதி, போக்குவரத்து செலவு உள்பட பல அலோவன்ஸ்கள் வழங்கப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post