புஷ்பா 2 மெகா வெற்றி..அல்லு அர்ஜுனை விடாமல் சுற்றும் சர்ச்சைகள்! பறந்த தெலுங்கானா போலீசின் நோட்டீஸ்!

post-img
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான சம்பவத்தை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் காயமடைந்த சிறுவனை சந்திக்கக் கூடாது என நேற்று அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. புஷ்பா-1 படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில், உள்ளிட்டோர் மீண்டும் இணைந்து இருந்த புஷ்பா 2 திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த படம் 1800 கோடி வசூலைத் தாண்டி உள்ளது. இதை அடுத்து இந்திய அளவில் மிகப்பெரும் நடிகர்களின் ஒருவராக அல்லு அர்ஜுன் உயர்ந்திருக்கிறார். அல்லு அர்ஜுன்: அதே நேரத்தில் படம் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஐந்தாம் தேதி படம் வெளியான போது ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் ரசிகர்களை சந்திக்க அல்லு அர்ஜுன் சென்றார். அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிர் இழந்தார். இதை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பேன் எனக்கூறிய அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக உறுதியளித்திருந்தார். அல்லு அர்ஜுன் கைது: இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிக்கடபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜூப்ளி ஹிள்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீனில் விடுதலை: தொடர்ந்து அல்லு அர்ஜுன் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி நடந்த சம்பவத்திற்கு நடிகரை மட்டுமே எப்படி பொறுப்பேற்க சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியதோடு அல்லு அர்ஜுனுக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இதை அடுத்து, அடுத்த நாள் காலையே அல்லு அர்ஜுன் விடுதலை செய்யப்பட்டார். சிறுவன் ஸ்ரீதேஜ்: இந்த நிலையில் அந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீ தேஜை சந்திக்க அல்லு அர்ஜுன் செல்வதாக தகவல் வெளியானது. இதை அடுத்து அல்லு அர்ஜுன் அந்த சிறுவனை சந்திக்க வரக்கூடாது என ராம்கோபால்பேட்டா காவல் நிலையத்திலிருந்து அல்லு அர்ஜுனுக்கு போலீசார் நேற்று நோட்டீஸ் வழங்கினர். அல்லு அர்ஜுன் நேரில் வந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது, மேலும் மருத்துவமனையிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது எனவே அல்லு அர்ஜுன் சிறுவன் ஸ்ரீதேஜ் சிகிச்சை பெற்று வரும் கிம்ஸ் மருத்துவமனைக்கு வரக்கூடாது என குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ரகசியமாக வர வேண்டும்: இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனது ரசிகர் ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை சந்திக்க அல்லு அர்ஜுனை அனுமதிக்காத குற்றம் என விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் சிறுவன் ஸ்ரீ தேஜை சந்திக்க அல்லு அர்ஜுனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அல்லு அர்ஜுனின் வருகை ரகசியமாக இருக்க வேண்டும் எனவும், கூட்டம் கூடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post