தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம்! வெடிக்கும் பிரச்னை

post-img
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (ஜனவரி 6) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வந்திருந்தார். ஆனால் சட்டப்பேரவை தொடங்கிய உடன் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ரவி உடனடியாக வெளியேறினார். இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று 2வது நாளாக சட்டப்பேரவை கூடியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன், மேல்மலையனூர் முன்னாள் எம்எல்ஏ ஆர்.தமிழ்மொழி ராஜதத்தன் ஆகியோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, இன்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும் 10 ஆம் தேதி வரை இந்த விவாதம் நடைபெறும். இந்த கூடத்தொடரின் இறுதி நாளான 11 ஆம் தேதி, விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உள்ளார். சட்டப்பேரவையில் விவாதம் தொடங்கப்படும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் சபாநாயகர் அப்பாவு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, விசிக உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக நோடடீஸ் வழங்கியுள்ளது குறி்ப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post