பிடிக்காட்டி ஆளுநர் பதவியில் ஏன் ஆர்.என்.ரவி ஒட்டி கொண்டிருக்க வேண்டும்?முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

post-img
சென்னை: அரசியல் சட்டக் கடமைகளை செய்ய மனமில்லாத ஆளுநர், அந்த பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆளுநர் உரையை வாசிப்பது சட்டசபை ஜனநாயகத்தின் மரபு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் @rajbhavan_TN. கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா! என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post