அமெரிக்க வைத்த ஆப்பு? கம்பெனியை விற்கும் அதானி..! 36,000 கோடி கடனா?

post-img
சென்னை: இந்தியப் பணக்காரர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதானி வில்மர் நிறுவனத்தை அவர் விற்பனை செய்ய முடிவு இருக்கிறார். பலருக்கு அதானி என்றவுடன் துறைமுகம் மற்றும் மின் உற்பத்தி, விமானநிலையங்களைக் கட்டுவது போன்ற தொழில்களைச் செய்து வருபவர் இவர் என்பது தெரியும். ஆனால், அதானி முதன்முதலில் ஆரம்பித்த நிறுவனம் எண்ணெய் வர்த்தகம் சார்ந்ததுதான். இதன் மூலம் அதிக அளவில் பெயர் சம்பாதித்தார் அதானி. அதன் அடுத்தகட்டமாக 'வில்மர்' என்ற வெளிநாட்டு கம்பெனியுடன் கூட்டு வர்த்தகம் செய்யத் தொடங்கினார் அதானி. இந்த நிறுவனம் முதன்முதலில் ஐபிஒ போட்டது. அதாவது பங்குச் சந்தையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனம் தனது பங்குகளைப் பொதுமக்களின் விற்பனை செய்வதற்காகக் கதவைத் திறந்துவிட்டது. அப்போது அதன் பங்குகள் 660 வரை சந்தையில் விற்பனையாகின. இந்த வில்மருடன் அதானி கம்பெனி டை அப் போட்டு பார்ச்சூன் ஆயில் உள்ளிட்ட சமையல் பொருட்களைத் தயாரித்து விற்று வந்தது. சில மாதங்கள் முன்னதாக அமெரிக்க நீதிமன்றத்தில் அதானிக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டுள்ளதால், அவரால் இனி வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து நேரடியாக நிதி முதலீட்டைத் திரட்டுவதில் முட்டிக்கடை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இனி வெளிநாட்டு வர்த்தகம் என்பது அதானியால் சுதந்தரமாகச் செயல்பட முடியாது என்பதால், வில்மர் நிறுவனத்துடன் போடப்படக் கூட்டு ஒப்பந்தத்தை அதானி விலக்கிக் கொள்ள இருக்கிறார் என்ற அப்டேட் நியூஸ் இப்போது வெளியாகி இருக்கிறது. இந்த வர்த்தகத்திலிருந்து அதானி வெளியேறுவதால், 2 பில்லியன் டாலர் அவருக்குக் கிடைக்கும் என்றும் கணிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு தனது கடன்களைக் குறைக்க அதானி திட்டம் போட்டுள்ளார். இப்போது அதானி வில்மர் என்ற கம்பெனியை சிங்கப்பூரில் உள்ள வில்மர் இண்டர்நேஷனல் கம்பெனிக்கு விற்க இருக்கிறார். இப்போது அதானியிடம் 44% பங்குகள் இருக்கின்றன. அதில் 31% பங்குகளை ஒரு ஷேர் 305 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்துள்ளார். சந்தை விலையைவிடக் குறைவான அளவில்தான் இந்தப் பங்குகளை விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பங்குச் சந்தை நிபுணர்கள் சொல்கின்றனர். இதனால் மறுபடியும் அமெரிக்க வில்மரின் பங்குகளின் அளவு 75% ஆகக் கூட இருக்கிறது. அதானியிடம் மீதம் உள்ள 11% பங்குகளைப் பொதுமக்களிடம் விற்கப் போவதாக தெரியவந்துள்ளது. அப்படிச் செய்யப்படும் போது இந்த நிறுவனத்தின் பெயரை மாற்றப்படும். அதானி பெயர் நீக்கப்பட்டு, பார்ச்சூன் பெயரில் தொடங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மொத்த பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் ரூ.35,000-36,000 கோடி கூடுதல் கடனைத் திரட்ட உதவும் என தெரியவந்துள்ளது., இது ரூ.50,000-52,000 கோடி கார்பஸை உருவாக்கும் என்று வென்ச்சுரா தெரிவித்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட அதானி நிறுவனத்தின் பங்குகள் ஒரேநாளில் 7% சரிவை சந்தித்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post