2025 முதல் நாளே.. நாஸ்டர்டாமஸ் சொன்னது நடக்கிறதா? அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த சம்பவம்.. ஷாக்

post-img
நியூயார்க்: புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவில் அதிகாலை நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. இதை பலரும் அரசியல் நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். அப்படி புத்தாண்டு தினத்தன்று என்ன நடந்தது என்று இங்கே பார்க்கலாம் உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார். விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம். உலகின் முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் இவர் இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார். 2025ல் என்ன நடக்கும்: இந்த நிலையில்தான் தற்போது நடந்து வரும் 2025ல் என்ன நடக்கும் என்ற கணிப்புகளை இவரின் புத்தகத்தில் இருந்து வெளியிட்டு உள்ளனர். நாஸ்ட்ராடாமஸின் ஒரு பத்தியில் "தீவுகளின் ராஜா" "பலத்தால் விரட்டப்படுவார்" என்று கூறுகிறது. அவர் மூன்றாம் சார்லஸ் அரசரைக் குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள். சார்லஸ் மன்னரைப் பற்றி ஒரு பத்தியில், "விரைவில் ஒரு பேரழிவுகரமான போர் நடக்கும். அது முடிந்த பின் ஒரு புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்ட காலம் பூமியை பாதுகாப்பார் என்றுள்ளார். "கொடூரமான போர்களால்" சூழப்பட்டு "எதிரிகளை விட மோசமான துரோகங்களால்" சில நாடுகள் வீழ்த்தப்படும் என்று எச்சரித்து உள்ளார். "பழங்கால பிளேக்" வெடிப்பை உலகம் எதிர்கொள்ளும். இங்கிலாந்துக்கு புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் இருக்காது.. அதற்கு காரணமாக இந்த பிளேக் அமைந்துவிடும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். ஏற்கனவே அவரது COVID-19 தொற்றுநோய் கணிப்பு உண்மையாகிவிட்டதால்.. இந்த முறையும் வேறு ஒரு பெருந்தொற்று பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேபோல் இன்னொரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேற்கு உலகத்தில் ஒரு தலைவர் தோன்றுவார். மேற்கு உலகில் மிகப்பெரிய தலைவர் வருவார்.. அவரின் வருகை காரணமாக உலகம் மாறுபடும். மக்கள் வாழ்க்கை மாறும். அரசியல் மாறும் என்று கணிப்பில் தெரிவித்து உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவில் நேற்று மின்னல் தாக்கியது. சரியாக புத்தாண்டு தொடங்கிய நேரத்தில் வெள்ளை மாளிகை மீது மின்னல் தாக்கியது. இதை பலரும் டிரம்ப் வருகையுடன் ஒப்பிட்டு வருகின்றனர். அமெரிக்க கேபிடல் கட்டிடம் மற்றும் வாஷிங்டன் நினைவுச்சின்னம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் மின்னல் தாக்கியது, இது சமூக ஊடகங்களில் நெட்டிசன்களிடம் தீவிரமாக பரவி வருகிறது. புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க கேபிடல் கட்டிடம் மற்றும் வாஷிங்டன் நினைவுச்சின்னத்தை ஒரே நேரத்தில் மின்னல் தாக்குவது நல்ல சகுனம். இது டிரம்ப் வருகையை குறிக்கிறது. அவர் வென்ற நாளில்.. தேர்தல் முடிவுகள் வந்த இதேபோல் மின்னல் தாக்கியது. அமெரிக்காவின் புது எழுச்சிக்கு இது எடுத்துக்காட்டாக இருக்கும் என்று தோன்றுகிறது என்று அமெரிக்கர்கள் போஸ்ட் செய்து வருகின்றனர். பலரும் மேற்கு உலகில் ஒரு தலைவர் உருவாவார் என்று நாஸ்டர்டாமஸ் கூறியதும் உண்மையாகிவிட்டதோ என்று நெட்டிசன்கள் கூற தொடங்கி உள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post