உடல் திசுக்களுக்குள் புகுந்து! புண்களை ஏற்படுத்தும் "மைக்ரோபிளாஸ்டிக்ஸ்"! மனித உணவில் கலந்த கொடூரன்

post-img
சென்னை: உணவுகளில் கலந்து உள்ள Microplastics .. அப்படியே உடலின் உள்ளே புண்களை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது. உலகம் முழுக்க மைக்ரோபிளாஸ்டிக்ஸ் அதிகரித்துள்ளது. நாம் சாப்பிடும் உணவு தொடங்கி உண்ணும் உணவு வரை எல்லா இடத்திலும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்தான் இருக்கிறது. ஏன் மனித ரத்தத்தில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடையே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாஸ்டிக்கின் சிறிய துகள்களை Microplastics என்று அழைப்பார்கள். உலகம் முழுக்க எல்லா இடத்திலும் Microplastics நீக்கமற நிறைந்து உள்ளது. எல்லா இடத்திலும் என்றால் எவரெஸ்டில் கூட பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. கடலுக்கு அடியில் பல ஆயிரம் அடியிலும் கூட பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன. பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையின் மலத்தில் கூட பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இப்போது அதில் புதிய வரவாக இணைந்து இருப்பதுதான் மனித ரத்தம். ஆம் மனித ரத்தத்தில் செல்களோடு, செல்களாக வாடகையே கொடுக்காமல் பிளாஸ்டிக் துகள்கள் உள்வாடகைக்கு இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி மொத்தம் 22 பேரின் ரத்தத்தை சோதனை செய்தனர். அதில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மொத்தம் 77 சதவிகிதம் பேரின் உடலில் இந்த ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் இருக்கும் Vrije Universiteit Amsterdamல் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக Environment International இதழில் ஆய்வு கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. ரத்தத்தில் பாலிமர் பொருட்கள் எனப்படும் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் உலகம் முழுக்க பிளாஸ்டிக் பொருட்களை உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயன்படுத்த கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. உணவுகளில் கலந்து உள்ள Microplastics .. அப்படியே உடலின் உள்ளே புண்களை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது. சீனாவில் உள்ள Zhejiang வேளாண்மை மற்றும் வனவியல் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆராய்ச்சி மையத்தில் இது தொடர்பான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. மனிதர்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் புண்களை ஏற்படுத்துகின்றன. திசுக்களுக்கு உள்ளே இவை புண்களை ஏற்படுத்துகின்றன. உடலில் பெரும்பாலான சேதமடைந்த திசுக்களில் மைக்ரோ மற்றும் நானோபிளாஸ்டிக் உள்ளன. இவை உடலை நேரடியாக மறைமுகமாக பாதிக்கின்றன என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு 1950 களில் 1.5 மில்லியன் மெட்ரிக் டன்களில் இருந்து 2021 இல் கிட்டத்தட்ட 390.7 மில்லியனாக உயர்ந்து உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு முழுக்க பார்சல் கட்ட பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்து உள்ளது. ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் இனி பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உணவு பொருட்கள் பார்சல் கட்ட பொதுவாக பேப்பர் வைத்து உள்ளே இழை வைக்கும் பழக்கம் இருந்தது. இழை செலவு அதிகம் என்பதால் பலரும் இப்போது சில்வர் பேப்பர்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். சில்வர் பேப்பர்களை பயன்படுத்தினால் பேப்பர் செலவும் இருக்காது. நேரடியாக சில்வர் பேப்பர்களை வைத்தே கட்டிவிடலாம். இது போக மசாலா, சாம்பார் ஆகியவை கட்ட பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தப்படுகிறது. சூடான பொருட்கள் கூட பிளாஸ்டிக் கவரை வைத்தே கட்டப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு முழுக்க பார்சல் கட்ட பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்து உள்ளது. எக்காரணம் கொண்டு ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் இனி பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மீறி செய்தால் அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post