சென்னை: இபி மீட்டர் பழுதடைந்த காலத்தில் செய்யப்பட்ட மின்சார கணக்கீட்டில் முறைகேடு கண்டறியப்பட்டால் மீண்டும் மின் கணக்கீட்டை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது .
தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் மின் நுகர்வோர் ஒருவருக்கு, ஜூன்-ஜூலை 2024க்கான நுகர்வுக் கட்டணமாக ரூ.7,800 மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் வீட்டில் குறைவான மக்கள் இருந்ததால் மின் நுகர்வு குறைவாக இருந்ததாக அவர் வாதம் வைத்துள்ளார்.
கட்டணம் எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதை டான்ஜெட்கோ பணியாளர்கள் தெளிவுபடுத்தவில்லை என்றும் அவர் புகார் கூறினார். பிப்ரவரி - மார்ச் மாதத்துக்கான மின்கட்டணமாக ரூ.1,151 செலுத்திய நிலையில் எப்படி மின் கட்டணம் அதிகரிக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். மீட்டர் பழுதாகி இருக்கலாம்.. ஆனால் அதை மாற்ற சொல்லியும் மாற்றவில்லை என்று அந்த நுகர்வோர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை விசாரித்த தமிழ்நாடு அரசின் நுகர்வோர் குறைதீர்ப்பு மையம்.. இபி மீட்டர் பழுதடைந்த காலத்தில் செய்யப்பட்ட மின்சார கணக்கீட்டில் முறைகேடு கண்டறியப்பட்டால் மீண்டும் மின் கணக்கீட்டை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது .
ஏற்கனேவே இபி மீட்டர் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் நேரடியாக மீட்டர்களை வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இனிமேல் மின்சார வாரியத்திடம் இருந்து மட்டும் மீட்டர் வாங்குவதற்காக மக்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
மீட்டர் வாங்க மக்கள் பலர் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் வகையில் மீட்டர் விற்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இவர்களிடம் மீட்டர் வாங்கிக்கொள்ளலாம். மின்சார வாரியத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
இவர்களிடம் மீட்டர் வாங்கிய பிறகு, நுகர்வோர் மீட்டர்களை நிறுவுவதற்கு முன் டேம்பர்-ப்ரூஃப் செய்ய டான்ஜெட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாரிய அதிகாரிகள், 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் மீட்டர்களை பொருத்துவார்கள். முன்னதாக, டான்ஜெட்கோ மீட்டர்களை கொள்முதல் செய்து, சோதனை செய்து, பிரிவு அலுவலகங்களுக்கு மொத்தமாக அனுப்பியது. இனிமேல் டான்ஜெட்கோ அங்கீகரித்த நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மக்களே வாங்க முடியும். ஆனால் இப்போது இபி மீட்டர் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
3 நாட்கள் அவகாசம்: இப்படிப்பட்ட நிலையில்தான் இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது,
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.