இந்தியாவுக்கு மிக அருகே.. சீனா கட்டும் உலகின் மிக பெரிய "ராட்சத" அணை.. பூமியின் சுழற்சிக்கு ஆபத்து?

post-img
பெய்ஜிக்: பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது. திபெத்திய பீடபூமியில் பிரம்மபுத்திரா நதியில் நீர்மின் திட்டத்திற்காக இந்த பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இருப்பினும், அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்பதால் இதனால் ஆபத்துகள் ஏற்படுமோ என்றும் அஞ்சப்படுகிறது. பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்குப் பெயர் போன நாடு என்றால் அது சீனா தான். புல்லட் ரயில், பிரம்மாண்ட அணைகள் என்று சீனா பல பெரிய கட்டுமானங்களைச் செய்துள்ளன. இதற்கிடையே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையைக் கட்ட சீனா இப்போது முடிவு செய்துள்ளது. 137 பில்லியன் டாலர் செலவில் அமையவுள்ள இந்த அணை, இந்தியாவின் எல்லைக்கு அருகே திபெத்தில் அமையவுள்ளது. இது உலகின் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டமாக்க இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சீனா இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் யர்லுங் சாங்போ ஆற்றின் (பிரம்மபுத்ராவின் திபெத்தியப் பெயர்) கீழ்ப் பகுதியில் மிகப் பெரிய நீர்மின் திட்டத்தை அமைக்கச் சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வங்கதேசத்தில் பாயும் முன்பு பிரம்மபுத்திரா நதி திபெத்தில் பெரிய யூ-டர்ன் போல வளைந்து செல்லும். இமயமலைப் பகுதியில் ஆறு வளைந்து செல்லும் இந்த பள்ளத்தாக்கில் தான் இந்த அணை கட்டப்பட உள்ளது. இந்த அணையின் கட்டுமானத்திற்கான செலவு ஒரு டிரில்லியன் யுவானை ($137 பில்லியன்) தாண்டலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டமாக இது இருக்கும். சீனாவுக்கு ஏற்கனவே திபெத்தில் ஜாம் நீர்மின் நிலையம் இருக்கிறது. இப்போது திபெத்தில் மிகப் பெரிய நீர் மின் நிலையமாக இருக்கும் இது, 2015ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கிறது. இந்தச் சூழலில் தான் அங்கு மற்றொரு மிகப் பெரிய நீர்மின் நிலைய திட்டத்தை இப்போது சீனா அறிவித்துள்ளது. அதேநேரம் இந்தத் திட்டம் அண்டை நாடுகளுக்குக் கவலை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.. இவ்வளவு பெரிய அணைக் கட்டினால் அது நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைச் சீனாவுக்கு மொத்தமாக அளிக்கும். மேலும், திடீரென அதிகளவு நீரைச் சீனா விடுவித்தால் அதனால் பிரம்மபுத்திரா பாயும் வழியில் கரையின் அருகே இருக்கும் இடங்களில் வெள்ள பாதிப்பும் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. அதேநேரம் பிரம்மபுத்திரா மீது இந்தியாவும் அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டுவது குறிப்பிடத்தக்கது. சீனா இப்போது முன்மொழிந்து அணை, பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றான திபெத்திய பீடபூமி மீது திட்டமிடப்பட்டுள்ளது. வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டு இந்த அணையில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அது மிகப் பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்தும். அதேநேரம் நிலநடுக்க ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பிற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பிரம்மபுத்திரா திபெத்திய பீடபூமியின் குறுக்கே பாய்கிறது.. அது சீனாவில் இருந்து இந்தியாவை அடைவதற்கு முன்பு சுமார் 25,154 அடி செங்குத்தான பள்ளத்தாக்கில் பாய்வது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீனா இதேபோல நீர்மின் திட்டத்திற்காக த்ரீ கோர்ஜஸ் என்ற அணையைக் கட்டியிருந்தது. இந்த ராட்சத அணையால் பூமியின் சுழற்சியே கூட பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் சீனா மீண்டும் அதை விடப் பெரிய அணையைக் கட்டும் நிலையில், அது பூமியின் சுழற்சியைப் பாதிக்குமோ என்று அஞ்சப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post