டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி காலமானார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை கடந்த சில வாரங்களுக்கு முன் மோசமடைந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. 92 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலம்நிலை இரவு 8 மணியளவில் மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு கடுமையான மூச்சு திணறல், பல்ஸ் குறைந்த காரணத்தால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார். விஷயம் அறிந்து அவரது குடும்பத்தினரும், மூத்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேராவும் மருத்துவமனைக்கு வந்தனர். இதையடுத்து 10.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
பல்வேறு உறுப்புகள் செயல் இழப்பு, மூச்சு விடுவதில் சிரமம், வயோதிகம் காரணமாக அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 1991-96 காலகட்டத்தில் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தில் நாட்டின் நிதியமைச்சராக மன்மோகன் சிங் முக்கியத்துவம் பெற்றார், பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் பெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
காங்கிரஸ் கூட்டணியான UPA வின் இரண்டு முறை பிரதமராக இருந்தார். 2004 மற்றும் 2014ல் அவர் பிரதமராக இருந்தார். மேலும் இந்த ஆண்டின் ஆரம்பம் வரை ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினார். அதன்பின் உடலநிலை காரணமாக மீண்டும் ராஜ்ய சபா செல்லும் முடிவை கைவிட்டார்.
மன்மோகன் சிங் அரசியல்வாதி என்பதை தாண்டி பொருளாதார நிபுணர், கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் நரேந்திர மோடிக்கு பிறகு நீண்ட காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரான சிங்.. இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமர் ஆவார். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு முழு ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த பின் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரும் இவரே என்ற சாதனைக்கு பெயர் பெற்றவர்.
இன்று பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாபில் உள்ள காஹ்வில் பிறந்த சிங்கின் குடும்பம் 1947 இல் அதன் பிரிவினையின் போது இந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. ஆக்ஸ்போர்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, சிங் 1966-1969 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றினார்.
லலித் நாராயண் மிஸ்ராவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் ஆலோசகராக இவர் பணியாற்றியதன் மூலம் அரசியலில் கவனம் பெற்றார். 1970கள் மற்றும் 1980களில் மன்மோகன் சிங் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (1972-1976), ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (1982-1985) மற்றும் திட்டக் கமிஷனின் தலைவர் (1985-1987) போன்ற பல முக்கிய பதவிகளை வகித்தார்.
1991 ஆம் ஆண்டில், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில், கடுமையான எதிர்ப்பையும் மீறி, இந்தியாவின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார். உலக அரசியலில் இவரின் நடவடிக்கைகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டதோடு உலக நாடுகளுக்கு பெரிய பெயரை இவருக்கு வாங்கி தந்தும் குறிப்பிடத்தக்கது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.