உங்களுக்கு 30 வயசு ஆச்சா? ஓய்வுக்கு பிறகும் ராஜா மாதிரி வாழ மாதம் எவ்வளவு முதலீடு செய்யணும் தெரியுமா

post-img
இந்தக் காலத்தில் பெரும்பாலானோர் தனியார் துறைகளில் தான் வேலை செய்கிறார்கள். இதனால் ஓய்வூதியம் நமக்குக் கிடைத்து. இதனால் ஓய்வுக்குப் பிறகு குடும்பம் நடத்தத் தேவையான பணம் என்பது நிச்சயமற்ற ஒன்றாகவே இருக்கிறது. முதலீடு: இதன் காரணமாகவே நம்மில் பலரும் பல்வேறு முதலீடுகளைச் செய்து வருகிறோம். இந்த நீண்ட கால முதலீடுகளைப் பொறுத்தவரை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு முன்கூட்டியே ஆரம்பிக்கிறோமோ.. அவ்வளவுக்கு அவ்வளவு அது நல்லதாகும். நீங்கள் முன்கூட்டியே சேமிக்கத் தொடங்கினால் Compounding காரணமாக ஓய்வு பெறும் வயதில் அது மிக பெரிய ஒரு தொகையாக உங்களுக்குக் கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு 30 வயதாகிவிட்டது என வைத்துக் கொள்வோம்.. சில காரணங்களால் உங்களால் இத்தனை காலம் ஓய்வூதியத்திற்குத் திட்டமிட முடியவில்லை என வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்யலாம்.. ஓய்வூதியத்திற்குப் பிறகு நிம்மதியான ஒரு வாழ்க்கையை நடத்த 30 வயதாகும் ஒருவர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.. இதற்கான பதில்களை நாம் இங்கே பார்க்கலாம். ஓய்வூதியம்: 30 வயதாகும் உங்களுக்கு இப்போது குடும்பத்தை நடத்த ரூ.50 ஆயிரம் செலவாகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது ஓய்வுக்கு பிறகும் நீங்கள் இதே வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றால் 60 வயதில் உங்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் தேவைப்படும். ஏனென்றால் ஆண்டுக்கு 5% பணவீக்கம் என்று நாம் கணக்கிட்டால் கூட இன்று ரூ.50 ஆயிரமாக இருக்கும் தொகையின் மதிப்பு நீங்கள் ஓய்வு பெறும் போது 2 லட்ச ரூபாயாக உயர்ந்து இருக்கும். எனவே, அதைக் கணக்கில் வைத்தே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். சரி விஷயத்திற்கு வருவோம்.. உங்களுக்கு இப்போது 30 வயதாகிறது.. அடுத்த 35 ஆண்டுகளுக்கு அதாவது 65 வயது வரை நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து அதில் ஆண்டுக்கு 12% வரை வட்டி கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். மேலும், Annuity ரேட்டாக 6%ஐ வைத்துக் கொள்வோம். எவ்வளவு முதலீடு செய்யணும்: இந்த அளவீடுகளை வைத்துப் பார்த்தோம் என்றால் நீங்கள் மாதாமாதம் ரூ.15,500 முதலீடு செய்ய வேண்டும். 65 வயது வரை நீங்கள் இதுபோல மாதம் ரூ.15,500ஐ முதலீடு செய்து வந்து, உங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 12% வட்டி கிடைத்தாலே போதும்.. அதன் பிறகு உங்களுக்கு எளிதாக ஓய்வூதியமாக ரூ. 2 லட்சம் கிடைக்கும். அதை வைத்து உங்களால் யாரிடமும் பணத்தை எதிர்பார்க்காமல் நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை ஓய்வு பெற்ற பிறகும் வாழ முடியும். உடனே ஆரம்பியுங்கள்: எப்போதும் நல்ல பலனைப் பெற நாம் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறோம் என்பது ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் முதலீட்டைத் தொடங்குகிறோமோ.. அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதாகும். அதாவது சின்ன வயதென்றால் சிறிய தொகையில் இருந்தே முதலீடு செய்தால் போதும். எனவே, உங்களுக்கு இப்போது எவ்வளவு வயதானாலும் உடனே முதலீட்டைத் தொடங்குங்கள். இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post