"மன்மோகன் சிங் பேசும்போது.. சர்வதேச நாடுகளும் அதை கவனிக்கும்.!" பாராட்டிய பராக் ஒபாமா

post-img
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாம் இருக்கும் நவீன இந்தியாவை உருவாக்கக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர். இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மிகவும் மதிக்கத்தக்கத் தலைவராகவும் பொருளாதார வல்லுநராகவும் மன்மோகன் சிங் இருந்துள்ளார். ஒரு முறை மன்மோகன் சிங் பேசினால் உலகமே கேட்கும் என்று அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா கூட பாராட்டியிருந்தார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது நாட்டில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். அவரது ஆட்சியில் தான் நமது நாட்டிற்குத் தேவையான பல்வேறு முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பிரதமர் பதவிக்கு வரும் முன்பே அவர், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித் துறைச் செயலர், யுஜிசி தலைவர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். 1991ம் ஆண்டு இந்தியா கடுமையான பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டது. அந்நிய செலாவணி மிக மோசமான சூழலில் இருந்த போது நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் மன்மோகன் சிங். அப்போது தான் அவர் தாராளமயமாக்கல் கொள்கையை அறிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தை மொத்தமாக மாற்றியது அந்த அறிவிப்பு தான். மேலும், பிரதமராக இருந்த காலகட்டத்திலும் மன்மோகன் சிங் பல முக்கிய சாதனைகளைப் படித்துள்ளார். வெளியுறவு விவகாரத்தில் அவரே நேரடியாகப் பல முடிவுகளை எடுத்தார். குறிப்பாக அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கொண்டு வருவதில் அவரது பங்கை வரலாறு என்றும் மறக்காது. அந்த அணுசக்தி ஒப்பந்தத்தைச் சோனியா காந்தி உட்படக் காங்கிரஸ் கட்சியிலேயே பல மூத்த தலைவர்கள் முதலில் ஏற்கவில்லை. இந்த அணுசக்தி ஒப்பந்தத்தைக் காரணமாகக் காட்டியே ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த இடதுசாரிகளும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டன. இருப்பினும், மன்மோகன் சிங் அதில் உறுதியாக இருந்தார். சுமார் 39 மாதங்கள் அவர் தீவிரமாக முயன்ற நிலையில், கடைசியாக 2008இல் இந்த ஒப்பந்தம் நிறைவேறியது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் உள் டொராண்டோவில் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. அப்போது தான் மன்மோகன் சிங்கை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா பாராட்டியிருந்தார். அங்குச் சர்வதேச அரங்கில் பேசிய ஒபாமா, "ஜி20 மாநாட்டில் பிரதமர் (மன்மோகன் சிங்) பேசும்போது, உலக நாட்டுத் தலைவர்கள் கவனமாகக் கேட்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பொருளாதாரப் பிரச்சனைகள், உலக வல்லரசாக இந்தியா எழுச்சி பெறுவதற்கான நுணுக்கங்கள் மற்றும் உலக அமைதி குறித்த அவரது ஆழ்ந்த அறிவே அதற்குக் காரணம்" என்று பேசியிருந்தார். இந்தியா கடந்த 1998ஆம் ஆண்டு பொக்ரான் 2 அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்ட நிலையில், இதன் காரணமாக இந்தியா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்து இருந்தது. அந்த பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டு வந்ததில் மன்மோகன் சிங் முன்னெடுத்த இந்த ஒப்பந்தம் மிக முக்கிய பங்காற்றியது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்திற்குக் காங்கிரஸ் கூட்டணியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் கூட்டணியில் இருந்தே மொத்தமாக விலகியது. இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆHத்து ஏற்பட்ட போது, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை மன்மோகன் சிங்கால் பெற முடிந்தது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post