மானஸ்தன் கார்த்திக் சுப்புராஜ்.. பொள்ளாச்சிக்கு பொங்கிய எதற்கும் துணிந்தவன் எங்கே? விளாசிய ப்ளூசட்டை

post-img
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மொத்த திரையுலகத்திலேயும் ஒரே ஒரு மானஸ்தர் கார்த்திக் சுப்பராஜ் மட்டும் தான் போல எனவும், பொள்ளாச்சி சம்பவத்துக்கு பொங்கிய 'எதற்கும் துணிந்தவன்' சத்தத்தையே காணோம் என விமர்சித்துள்ளார் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன். சென்னை நகரின் மையப் பகுதியான கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் மறைவான இடத்தில் அந்த மாணவியும் அவரது காதலனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மாணவனை கடுமையாக தாக்கி விட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஞானசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அவர்," சென்னை அண்ணா பல்கலை சம்பவத்தை அடுத்து பெண்களுக்கு அதிக சக்தியும் பலமும் தர வேண்டும். இந்த குற்றத்தில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அனைத்து ஆண்களையும் நரகத்தில் அழுகச் செய்யுங்கள்" என பதிவிட்டிருந்தார். இதற்கு முன்பு மக்களுக்காக.. குறிப்பாக பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு திரையுலகினர் குரல் தந்தனர். தற்போது அனைவரும் சைலன்ட் மோடில். விஜய் அரசியல் கட்சித்தலைவர் என்பதால் கண்டனம். தெரிவித்தார். தெரிவித்துதான் ஆக வேண்டும். அரசியல் சார்பற்று.. குரல் தந்துள்ள ஒரே திரையுலக… https://t.co/jfhjzbgwbD அதனை ரீ-ட்வீட் செய்துள்ள பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்," இதற்கு முன்பு மக்களுக்காக.. குறிப்பாக பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு திரையுலகினர் குரல் தந்தனர். தற்போது அனைவரும் சைலன்ட் மோடில். விஜய் அரசியல் கட்சித்தலைவர் என்பதால் கண்டனம். தெரிவித்தார். தெரிவித்துதான் ஆக வேண்டும். அரசியல் சார்பற்று.. குரல் தந்துள்ள ஒரே திரையுலக ஆண்மகன்.. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மட்டுமே. பொள்ளாச்சில பெண்களுக்கு எதிரா தவறு நடந்ததை படமாக்கி... அதுல வீரவசனம் பேசி ஆக்சன்ல அதிரடி கெளப்புனான் .. எதற்கும் துணிந்தவன். இப்ப சத்தத்தையே காணும்... சத்யராஜ், சூர்யா , விஷால், வெற்றிமாறன் உள்ளிட்ட பல புரட்சிப்புலிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ரஜினி, கமல் மௌனம் காப்பது ஏனென்று ஊருக்கே தெரியும். ஊதவே வேண்டாம். ஒரே ஒரு படம் ஓடினாலும் ஓடியது. இந்த திடீர் தளபதி டெய்லி குறுக்கே மறுக்கே ஓடிட்டு இருக்கான். செஸ் வீரருக்கு வாட்ச் பரிசு, நல்லக்கண்ணு ஐயாவை சந்திப்பது என இந்தக் கொசு திடீரென டேக் ஆஃப் ஆகியிருக்கு. ஆனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இவன் எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. ஒரே மானஸ்தன்: இவங்கள்ல பலருக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறது. அதை மனசுல வச்சாவது குரல் தர வேண்டாமா? மொத்த திரையுலகத்திலேயும் ஒரே ஒரு மானஸ்தர்.. அது கார்த்திக் சுப்பராஜ் மட்டும்தான் போல. மத்த ஸ்டார்கள் எல்லாம் படத்துல மட்டும்தான் பெண்களை காப்பாத்துவாங்க.” என கூறியுள்ளார். எதற்கும் துணிந்தவன்: அவரது மற்றொரு பதிவில்," பொள்ளாச்சில பெண்களுக்கு எதிரா தவறு நடந்ததை படமாக்கி... அதுல வீரவசனம் பேசி ஆக்சன்ல அதிரடி கெளப்புனான்.. எதற்கும் துணிந்தவன். இப்ப சத்தத்தையே காணோம்" என பதிவிட்டுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post