பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே ரவி என்பவருக்கு சொந்தமான 12 கோழிகள் மொத்தமாக இறந்த நிலையில், இறந்த கோழியின் வயிற்றை அவர் அழுத்திய போது, கோழியின் வாயில் இருந்து நெருப்பு வந்துள்ளது. இதனை அவர் வீடியோவாக பதிவிட்டுள்ள நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய நவீன டிஜிட்டல் யுகத்தில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவும் உள்ளங்கையில் செல்போன் வந்து விட்ட நிலையில், பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஒரே இரவில் ஒருவர் உலக ஃபேமஸ் ஆகலாம்.. உலக ஃபேமஸ் ஆக இருந்த ஒருவர் ஒரே நாளில் அடியோடு அடியாக சரிந்து போகலாம்..
சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும், சில வீடியோக்களை அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவில் இருந்த கோழியின் வயிற்றை அழுத்திய போது அது நெருப்பைக் கக்குவது போல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹடிகே என்றேஅ கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. விவசாய வேலை செய்து வரும் இவர் தனது வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார். சிறிய கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்து பெரிதானதும் அவற்றை விற்பது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது அவரது வீட்டில் 30க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்த நிலையில், திடீரென மொத்தமாக 12 கோழிகள் செத்து விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோழிகளை ஒன்றாக வைத்து இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கோழியின் வயிற்றை அவர் அழுத்தியுள்ள அப்போது திடீரென கோழியின் வாயிலிருந்து புகை கலந்த நெருப்பு வந்தது. இதனால் அச்சமடைந்த அவர் மீண்டும் கோழியின் வயிற்றை அழுத்திய போது அதில் தொடர்ந்து நெருப்பு வெளியானது.
Forget Kentucky Fried Chicken, Here's Karnataka Fiery Chicken!
Local authorities in India’s Hassan are running around like a headless... well, chickens... after the death of dozens of poultry. (News 18 Kannada)
The fiery phenomenon has been blamed on “miscreants” suspected of… pic.twitter.com/9wJzw3d36t
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கு ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் அவர்களும் அச்சம் அடைந்தனர். இதை அடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்த ரவி, தற்போது அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை அடுத்து டிராகன் கோழி என்ற பெயரில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரசாயனம் கலந்த உணவை யாராவது கோழிக்கு கொடுத்திருக்கலாம். இதன் காரணமாக வயிற்றில் அதனை அழுத்திய போது புகை கலந்த நெருப்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் கோழியின் வாயிலிருந்து நெருப்பு வரும் நிலையில் உடல் பகுதிகள் எதுவும் கருகவில்லை. இதனால் விளையாட்டுக்காக ரவியே கோழியின் வாயில் ஏதாவது பொருளை வைத்து நெருப்பு வருவது போல செய்து இருக்கலாம் என கூறுகின்றனர். எது எப்படியோ தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் நெட்டிசன்களின் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர் நெட்டிசன்கள்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.